• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Twitter Trending : ட்விட்டரையும் விட்டு வைக்காத #VillageCookingChannel..இந்திய அளவில் No.1

Twitter Trending : ட்விட்டரையும் விட்டு வைக்காத #VillageCookingChannel..இந்திய அளவில் No.1

VillageCookingChannel

VillageCookingChannel

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் VillageCookingChannel , 3rdWave , Manali , ipl2022 ,Drishyam2,JeethuJoseph, Mohanlal,Raina,PVSindhu,GetVaccinated ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

 • Share this:
  #3rdWave , #Manali இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்த டேகில் பலரும் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு மக்கள் தான் காரணம் அரசை குறை கூடாது. நாமே நமது தீங்கிற்கு வழி வகுகின்றோம் என பதிவிட்டு வருகின்றனர்.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு மூன்று கோடியே ஐந்து லட்சத்து 45 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது.



  நாடு முழுவதும் ஒரே நாளில் 955 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து இரண்டாயிரத்து ஐந்தாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 52 ஆயிரத்து 299 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 78 ஆக உயர்ந்துள்ளது.

  கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 350 ஆக குறைந்துள்ளது.35 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 306 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.













  #VillageCookingChannel என்ற ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் நன்கொடை, 1 கோடிக்கும் மேலான சப்ஸ்கிரைபர்களுடன், தென்னிந்தியாவில் முதல் டைமண்ட் பட்டன் என கலக்குகிறது வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் யூ-ட்யூப் சேனல். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், யூடியூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனலை' நடத்தி வருகிறார்கள்.



  ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும் இந்த சேனல் பெற்றுள்ளது. அதோடு தென்னிந்தியாவிலேயே முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனல் என்ற மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொண்டனர்.

  இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் ரூ 10 லட்சம் நன்கொடையளித்துள்ளனர். இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.











  #ipl2022 என்ற ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ipl2022 ஏலம் டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளது.



  அக்டோபர் 2021 இல் இரண்டு புதிய அணிகள் கூடுதலாக, உரிமையாளர்கள் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது (ஒன்று 2 இந்தியர்கள், 2 வெளிநாட்டு அல்லது 3 இந்தியர்கள், 1 வெளிநாடுகளில்) என கூறப்பட்டுள்ளது இதன் காரணமாக இந்த டேக் அதிகம் ட்ரெண்டாகின்றது.











  அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ள ஹேஷ்டேக் #Drishyam2,#JeethuJoseph, #Mohanlal , #12thMan

  நேரடியாக ஓடிடியில் வெளியான பிறகு ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது அரிது. மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 அதனை சாதித்திருக்கிறது.ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் 2 இந்த வருட ஆரம்பத்தில் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கேரளாவைத் தாண்டியும் படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர். படமும் அவர்களை ஏமாற்றவில்லை. கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக்காகி வருகிறது.



  இந்நிலையில் யுஏஇ யில் 27 திரையரங்குகளிலும், கத்தாரில் எட்டு திரையரங்குகளிலும், ஓமனில் இரு திரையரங்குகளிலும் த்ரிஷ்யம் 2 திரையிடப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் கணிசமான மலையாளிகள் உள்ளனர். மலையாளப் படங்கள் அங்கு நல்ல வரவேற்பை பெறும். அதனை மனதில் வைத்து த்ரிஷ்யம் 2 வை வெளியிட்டுள்ளனர். ஓடிடியில் ஏற்கனவே பெரும்பாலானவர்கள் படத்தைப் பார்த்திருந்தாலும், திரையரங்கிலும் படம் வசூல் சாதனை படைத்து வருகின்றது.

  மோகன்லால் நடிப்பில் அடுத்து மராக்கர் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் ஓணத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை இந்தியாவில் வெளியாகும் அதேநாள் வெளிநாடுகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்குள் கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பதே சந்தேகத்துக்குரிய விஷயமாக உள்ளது. இதனிடையே ஜீத்து ஜோசப்புடன் அடுத்த படத்தில் மோகன்லால் இணையவுள்ளார். 12thMan திரில்லரில் இருவரும் வெற்றி நடை போடவிருக்கின்றனர். இத்தனை ட்விட்டரில் மோஹன்லாலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.









  பேட்மின்டன் வீராங்கனை #PVSindhu விற்கு இன்று பிறந்த தினம் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



  ட்விட்டரில் #PVSindhu என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகின்றது.











  #GetVaccinated என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி அவசியம் அதனை உறுதி செய்தல் வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த டேக் ட்ரெண்டாகி உள்ளது.



   







  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: