Twitter Trending : 'எங்களுக்கு நீதி வேண்டும்'..ஜானி டெப் ரசிகர்களுக்கு போட்டியாக ட்ரெண்டிங்கில் குதித்த அஜித் ரசிகர்கள் -டுடே ட்விட்டர் ட்ரெண்ட்

ட்விட்டர் ட்ரெண்ட்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ValimaiFirstLookOnJuly ,ThalaAjith ,TuesdayFeeling ,JusticeForJohnnyDepp ,Doctor ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

 • Share this:
  இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #ValimaiFirstLookOnJuly ,#ThalaAjith

  சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார்.  நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் #ValimaiFirstLookOnJuly என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.  அடுத்ததாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #Doctor

  சிவகார்த்திகேயன் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் ஒடிடி தளத்திற்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டே தயாரிப்பு பணிகளை முடித்துவிட்டு டாக்டர் படக்குழு, படத்தின் விளம்பர வேலைகளாக அதன் பாடல்களையும் வித்தியாசமான வகையில் வெளியிட்டது. ஆனால் ஒருவனாக ஊரடங்கு காரணமாக திரைப்படம் வெளியாக வில்லை.  இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் நடிகர் விஜயுடன் அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்டர் வெளியாகும் என விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில் அப்போதும் படம் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றியது.ஓராண்டுக்கும் மேலாக படம் வெளியாகாமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து அது தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் குழுவுடன் டாக்டர்களும் ஒப்பந்தம் செய்து விட்டதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.விரைவில் படத்தை ஹாட்ஸ்டார் இல் எதிர்பார்க்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.  இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #JusticeForJohnnyDepp

  ஜானி டெப் (Johnny Depp)ஓர் அமெரிக்க நடிகர். இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வென்றுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ்பெற்றவர்.

  பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்(Pirates of the Caribbean) படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். உலக அளவில் அதிக ரீச்சான திரைப்படம் பல பாகங்கள் உருவானது. இதன் அனைத்து பாகங்களுக்கும் அதிக வசூல் படைத்தது. இதில் நடித்த கேப்டன் ஜாக் ஸ்பேரோ எனும் பெயருக்காகவே ரசிகர்கள் பட்டாளம் ஜானி டெப்க்கு உலகம் முழுதும் உள்ளனர். கடற்கரை கொள்ளையர்களை பற்றி கற்பனை கதையாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் மட்டும் அல்லது படத்திற்கென தனி ரசிகர்களையும் பெற்றது. அதற்கு முக்கிய காரணமே ஜானி டெப் தான்.  சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஜானி டெப் தனது இடத்தை அதிககாலம் தக்கவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்தப் பணத்தை முதலீடு செய்து தொழிலில் இறங்கினார். இவர் எவ்வளவு தூரம் உயரத்தில் பறந்தாரோ அவ்வளவு தூரம் விமர்சிக்கப்பட்டும் வந்தார். இவரது ஆடம்பர வாழ்வு ஆங்கில நாளிதழ்கள் பலவும் வர்ணித்தன. லுயிவில்லி மாகாணம் கென்டகியில் அவர் வாங்கிய குதிரைப் பண்ணை, டெப் குடிக்கும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த ஒயின்கள், டெப் வைத்திருந்த 45 சொகுசு வாகனங்கள், வாங்கிய அரிய கலைப் பொக்கிஷங்கள், ஏலத்தில் எடுத்த ஒவியங்கள், பொருட்கள், பொழுதை கழிக்க வாங்கிய சொகுசு கப்பல் , அவரது வீட்டுக் காவலாளிகள் மற்றும் வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அவர் கொடுத்த சம்பளம் வரை அத்தனையும் விமர்சிக்கப்பட்டது.

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #TuesdayFeeling .  இன்றைய தினம் செவ்வாய் கிழமை என்பதால் இன்றைய தினம் குறித்த தத்துவங்கள், காலை வணக்கம் குறித்த பதிவுகள் இதில் பகிரப் பட்டு வருகின்றது.
  Published by:Sankaravadivoo G
  First published: