• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Twitter Trending : ட்ரெண்டாகும் ஜோசப் விஜய்..’அசுரன்’ தெலுங்கு ரீமேக் ’நாரப்பா’ இப்படியா? இன்றைய ட்ரெண்டிங்

Twitter Trending : ட்ரெண்டாகும் ஜோசப் விஜய்..’அசுரன்’ தெலுங்கு ரீமேக் ’நாரப்பா’ இப்படியா? இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டரில் Vadivelu,WeSupportThalapathyVijay,Priyamani,Joseph Vijay ஹேஷ்டேக் அதிகம் ஷேர் செய்யப் பட்டு வருகின்றது.

  • Share this:
     இன்றைய தினம் ட்விட்டரில் Vadivelu ஹேஷ்டேக் அதிகம் ஷேர் செய்யப் பட்டு வருகின்றது.பலரும் இந்த டேகில் நடிகர் வடிவின் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததுமிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார் குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து முதலமைச்சர் என்னிடம் பேசினார்.



    அவரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன்” என்று கூறினார்.மேலும், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாகச் சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டு, மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்துள்ளார்.







    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார். பெண்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய வடிவேலு, தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இதன் காரணமாக ட்விட்டரில் இன்றைய தினம் Vadivelu ஹேஷ்டேக் அதிகம் ஷேர் செய்யப் பட்டு வருகின்றது.





    "Joseph Vijay" ஹேஷ்டேக் அடுத்ததாக அதிகம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தடை கோரிய நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.



    உலகின் பிரம்மாண்ட சொகுசு கார்களில் முதன்மையானது ரோல்ஸ் ராய்ஸ் இதன் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.
    ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் கேட்கும் சொகுசு வசதிகளுக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் தனித்தனி வசதிகளுடன் தயாரிக்கப்படுகின்றது.அந்த வகையில், ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட் வகை காரை இங்கிலாந்திலிருந்து 2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்துள்ளார் நடிகர் விஜய்.

    வெளிநாட்டிலிருந்து யார் காரை இறக்குமதி செய்தாலும், இறக்குமதி வரியுடன், நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம். இறக்குமதி செய்யப்பட்ட காரின் மதிப்பில் 20% நுழைவு வரியை வணிக வரித்துறையில் செலுத்தி, பதிவுக்கு உகந்தது என்று போக்குவரத்து துறை அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    இந்நிலையில் நடிகர் விஜய் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தடை கோரிய வழக்கில் தமிழகத்தில் நடிகர்கள் நாடாளும் வகையில் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் ரீல் ஹீரோக்களாக மட்டுமல்லாமல், ரியல் ஹீரோக்களாகவும் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை 2 வாரத்தில் தமிழ்நாடு கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.இதற்கு ட்விட்டரில் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.









    #Priyamani ஹேஷ்டேக் அடுத்தபடியாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. தேசிய விருதுகளைக் குவித்த ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ’நாரப்பா’ நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.வரும் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதில் நடிகை மஞ்சு வாரியரின் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்கிறார்.



    இவரது கதாபாத்திரத்தை ட்விட்டரில் ப்ரியாமணி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அசுரன் பச்சையம்மாளா இது? என ஆச்சர்யத்தில் உறைந்து உள்ளனர். பருத்தி வீரனுக்கு பிறகு இந்த கதாபாத்திரம் ப்ரியாமணிக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தரும் என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.











    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: