• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Twitter Trending Today : உ.பி முதல்வருக்கு குவியும் வாழ்த்து... ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

Twitter Trending Today : உ.பி முதல்வருக்கு குவியும் வாழ்த்து... ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய தினம் ட்விட்டரில் WorldEnvironmentDay, Ben 10, VenkaiahNaidu, Yogi Adityanath ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 • Share this:
  இன்றைய தினம் ட்ரெண்டிகள் உள்ள ஹேஷ் டேக் #WorldEnvironmentDay, #June5.

  உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5ம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.

  இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

   

      

      

      

  உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. இன்று உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பலரும் மரங்கள் நட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் ஹேஷ்டேக் பென்டென். மற்ற கார்ட்டூன்களை விட இது மிகவும் சுவாரசியமானது என இணையவாசிகள் இந்த டேக்கில் Ben 10 கார்ட்டூன் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.      

      

      

      

      

   

  இன்று பலரும் இணையத்தில் உத்ரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இன்று அவரது பிறந்த தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.  இவர் 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கும் இவர் கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் இவரது ஆசான் மகந்த் அவைத்தியநாத் 2014 செப்டம்பரில் இறந்த பிறகு யோகி ஆதித்தியநாத் தலைமை குருவானார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் இந்து யுவ வாகினி என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார். ஆதித்தியநாத் கோராக்பூரிலுள்ள மடத்தின் தலைவராக உள்ளார்.

  அங்குள்ள குடியிருப்பில் எளிமையான முறையில் வாழ்ந்து வருகிறார். அங்கு வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் எதுவுமில்லை. நேரு, மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் படிக்கும் வழக்கம் கொண்டவர். இவர் 400 க்கும் மேற்பட்ட பசுத் தொழுவங்களை (கோசாலா) நடத்தி வருகிறார். அவற்றின் தலைமை ஊழியராக முகமது என்பவர் பணியாற்றி வருகிறார்.

   

      

      

      

      

  இன்றைய தினம் ட்ரெண்டிகள் உள்ள ஹேஷ் டேக் "Vice President of India"

  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை குடியரசுத் தலைவர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றார்.

  ஒன்று அவரது சொந்த அக்கௌன்ட் , மற்றொன்று அலுவலக ரீதியில் பயன்பாட்டில் உள்ள அக்கௌன்ட். இதில் அவரது பெயரில் அவருக்கென உள்ள தனிப்பட்ட அக்கௌண்டில் ( @MVenkaiahNaidu ) 1.3 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.  மற்றொன்று அலுவல் ரீதியான பக்கத்தில் ( @VPSecretariat ) 931K பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இதில் அவரது தனிப்பட்ட அக்கௌன்ட்டில் உள்ள ப்ளூ டிக்கை ட்விட்டர் நீக்கம் செய்துள்ளது. இதற்கு இணையத்தில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

   

      

      

  இவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டதற்கு இணையவாசிகள் ட்விட்டருக்கும், மத்திய அரசிற்கும் போட்டி நிலவி வருவதாகவும், எதன் அடிப்படையில் நீக்கினீர்கள்.. விளக்கம் ஏதும் ட்விட்டர் தெரிவித்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  பின்னர் சற்று நேரத்தில் அவரது ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூ டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சில மாதகாலம் ட்விட்டர் பயன்படுத்தாமல் இருந்ததால் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: