• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Twitter Trending Today : 200 மில்லியனை நெருங்கும் விஜயின் ‘வாத்தி கம்மிங்’...தொடரும் சமந்தா மீதான எதிர்ப்பு - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

Twitter Trending Today : 200 மில்லியனை நெருங்கும் விஜயின் ‘வாத்தி கம்மிங்’...தொடரும் சமந்தா மீதான எதிர்ப்பு - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டரில் VaathiComing , FamilyMan2_against_Tamils ,Malayali, ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 • Share this:
  ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூ-ட்யூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடக்கவுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டரில் VaathiComing ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

   

      

      

      

   

  எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.  கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால், ‘மாஸ்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.

  ALSO READ | குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்

  ‘தி பேமிலி மேன்’ இணையத்தொடரை முற்றிலும் தடைசெய்ய பலரும் கணடன குரல்களை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளை மீறி தி ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியான தொடர் தி பேமிலி மேன் வெப் சீரிஸ். 2019-ல் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.  இந்த இரண்டாவது சீசனின் கதைக் களம் சென்னையில் நடைபெறுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக சித்தரித்து அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது சித்தரிக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தொடரில் சமந்தா விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார்.

      

      

  அதனைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் தொடர் வெளியிடப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, ஃபேமிலி மேன் தொடரைத் தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசு கடிதம் அனுப்பப்பட்டது.இணையத்தில் இது தொடர்பாக #FamilyMan2_against_Tamils எனும் ஹேஷ் டேக் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  ALSO READ |   விமான பணிப்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண்.. பற்கள் உடைப்பு.. காரணம் இது தான்!

  டெல்லியில் உள்ள முன்னணி அரசு மருத்துவமனை ஒன்று செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமானது (GIPMER) டெல்லியின் மிகப்பெரும் மருத்துவமனைகளுள் ஒன்றாகும். இங்கு பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக வழக்கு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ‘கடும் நடவடிக்க்கை’ எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

      

   

     மருத்துவமனையின் சுற்றறிக்கையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு அது அசெளகரியத்தை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதால் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  ALSO READ |  "Go Corona Go" வீடியோ கேம்... 14 வயது சிறுவனின் முயற்சி!

  இருப்பினும் சுற்றறிக்கையில் குறிப்பாக மலையாள மொழியை சுட்டிக்காட்டியிருப்பது பலருக்கு அதிருப்தியை தந்துள்ளதாக செவிலியர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.இதற்கு கண்டனம் தெரிவித்து பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அடுத்ததாக இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #ThankYouModiJi . பிரதமர் மோடியின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பாராட்டி இணையத்தில் இணையவாசிகள் அடிக்கடி நன்றி தெரிவித்து ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது #ThankYouModiJi எனும் ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

   

      

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: