Twitter Trending Today : பிரதமர் மோடியை நேசிக்கும் நெட்டிசன்கள்.. வூஹான் லேப் குறித்து கணித்த டிரம்ப் - இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்ரெண்டிங் இவை தான்

இன்றைய தினம் ட்விட்டரில் #PetrolDieselPriceHike , #NitinGadkari, #PetrolDieselPriceHike , #WeLovePmModiJi , #WuhanLab , #ThursdayThoughts , #JawaharlalNehru போன்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி உள்ளது.

 • Share this:
  இன்றைய தினம் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் #PetrolDieselPriceHike : கொரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கொரோனா காலத்தில் மக்களின் வாகன பயன்பாடு குறைந்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ள போதிலும் இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  இது குறித்த ஆய்வுகளை எண்ணெய் துறை சார்ந்த நிறுவனங்கள் நடத்தி உள்ளன. அதில், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனை சற்று அதிகமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

   

      

  அடுத்தபடியாக இன்றைய தினம் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் #NitinGadkari.  மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பிறந்த தினம் இன்று. அவருக்கு வாழ்த்து தெரிவித்து Happy Birth Day sir எனும் ஹேஷ்டேக்க்கும் ட்ரெண்டாகி வருகின்றது.

   

      

      

  அடுத்தபடியாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #JawaharlalNehru  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம் இன்று. ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார். அவர் 1964 மே மாதம் இதே நாளில் அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

  ALSO READ |  குக்கூ குக்கூ... ட்விட்டர் போச்சா... வாழ்த்து சொல்லும் பௌத்தர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

  அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லித் தெருக்களில் இருந்தும், மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

  இந்நிலையில் இன்று அவரது நினைவு தினம் என்பதால் #JawaharlalNehru ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மரியாதை செலுத்திய படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

   

      

      

  அடுத்ததாக வழக்கம் போல டிரண்டாகும் ஹேஷ்டேக் #ThursdayThoughts  இதில் பலரும் காலை வணக்கம், மோட்டிவேஷன் பதிவுகளை ட்வீட் செய்து வருகின்றனர். அவ்விதம் ஒருவர் இரவு சீக்கிரம் தூங்கி காலை சீக்கிரம் எழுதல் குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

   

      

  இணையத்தில் கடந்த சில நாட்களாக #WuhanLab எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூகான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய 3 ஆய்வாளர்கள் தங்களுக்கு தொற்று இருப்பதாகவும் மருத்துவமனை சிகிச்சை தேவை என்றும் கூறியதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை வெளிவராத அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதைத் தெரிவித்துள்ளது.

  ALSO READ | நியாபகம் வருதே..நியாபகம் வருதே ... 80ஸ் கிட்களின் முதல் சோசியல் மீடியா ஆர்குட் - நினைவுகூரும் நெட்டிசன்ஸ்!

  இந்த புதிய அறிக்கையின் படி வூகான் வைரஸ் ஆய்வு சோதனைக்கூடத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆய்வளர்களின் எண்ணிக்கை, அவர்களது மருத்துமனை வருகைப் பதிவுகள், அவர்கள் நோய்வாய்ப்பட்ட காலம் ஆகியவை இந்த வூகான் சோதனை நிலையத்திலிருந்துதான் வைரஸ் கசிந்துள்ளது என்ற ஐயத்தின் மீதான உறுதிப்பாட்டை வலுவடையச் செய்துள்ளது.

  கோவிட்-19 குறித்த அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகளை உலகச் சுகாதார அமைப்பு நடத்தவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இணையத்தில் கடந்த சில நாட்களாக #WuhanLab எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என கூறியதையும் இணையவாசிகள் நினைவு கூர்ந்துள்ளனர்.

   

      

      

      

   

  அடுத்தத்தபடியாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்  :  #WeLovePmModiJi  பிரதமரின் உடை முதல் அவரின் வாழ்க்கை முறை வரை அனைத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்து அவரை பின்தொடரும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.

  ALSO READ |  நம்பர் 1 இடத்தில் ரம்யா பாண்டியன்... பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

  அவ்விதம் பிரதமர் மோடியிடம் இன்று இணையவாசிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.  அதற்கு சான்றாக இணையத்தில் இன்றைய தினம் #WeLovePmModiJi எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதில் பலரும் பிரதமர் மோடிக்கு தங்கள் அன்பை பரிமாறி வருகின்றனர்.

   

      

   

   

   

      

   

   

   

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: