Twitter Trending : நம்பர் 1 இடத்தில் ரம்யா பாண்டியன்... பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டரில் நடிகர் கார்த்தி, நடிகை ரம்யா பாண்டியன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் , GodMorningTuesday , BanPSBB போன்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.

 • Share this:
  இன்றைய தினம் ட்விட்டரில் முதலிடத்தில் இருப்பது HappyBirthdayKarthi எனும் ஹேஷ்டேக். நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பிஎஸ்பிபி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து கிரசென்ட் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தார். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து வெளிநாட்டில் மேற்படிப்பு படித்த நடிகர் கார்த்தி,

  இயக்குநர் மணிரத்னத்திடன் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றி பின்னர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கார்த்தி தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இன்று (25.05.2021) பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் உலா வரும் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!

  ALSO READ |  தல vs தளபதி.. ட்ரெண்டாகும் #PSBB.. வூஹானில் நடப்பது என்ன? - இணையத்தில் இன்றைய ட்ரெண்டிங் இவை தான்

  இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்த பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

   

      

      

      

   

  இதற்கு அடுத்த படியாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருப்பது, #GodMorningTuesday எனும் ஹேஸ்டேக்  தினம் தினம் காலை வணக்கம் குறித்த ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் இடம் பெரும். அந்த வகையில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை என்பதால் GodMorningTuesday எனும் ஹேஸ்டேக் இடம் பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் இணையவாசகிகள் பலரும் வாழ்க்கை அனுபவங்கள், தத்துவங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகின்றனர்.

   

      

  இதற்கு அடுத்த படியாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் : #RamyaPandian.  ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாண்டியன், அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பாரத்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனது மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

  ALSO READ |  இந்த வருஷம் முழுக்க சந்தோஷ் நாராயணன் ஆட்சி தான்...நீ பேசுமா சிவாங்கி...DNA டெஸ்ட் எங்க பாரதி? - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

  அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யாவுக்கு 4-ம் இடம் கிடைத்தது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே 2020 இல் தொலைக்காட்சி மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் ரம்யா பாண்டியன் முதல் இடத்தில் உள்ளதால் இவரது பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.

   

      

  இதற்க்கு அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் : #BanPSBB

  வணிகவியல் பாடத்தில் மேல்நிலை பள்ளி ஆசிரியராக கடந்த 27 ஆண்டுகள் பத்மா சேஷாத்திரி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் ராஜகோபாலன். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்-டூ மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மாணவிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலமாக அவர்களிடம் சேட் செய்வது மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்ப நிர்பந்திப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்ததையும், தனது வாக்குமூலத்தில் அவரே கூறியுள்ளார்.  இவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் பலரும் குரல் கொடுத்த நிலையில் தற்போது #BanPSBB என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

  இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. அந்த வீடியோவில் பள்ளி பீஸ் கட்ட முடியலன்னா கோடம்பாக்கம் பிளாட்பார்ம்க்கு கூட்டிட்டு போங்க பணம் கிடைக்கும்னு எங்க அம்மாட்ட சொன்னாங்க என பாலியல் தொல்லை சர்ச்சைக்கு உள்ளான பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

   

      

      

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: