ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Twitter Trending Today : கலைஞர் புகழ் பாடும் இணையவாசிகள்...எமோஜியை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

Twitter Trending Today : கலைஞர் புகழ் பாடும் இணையவாசிகள்...எமோஜியை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய தினம் ட்விட்டரில் #HBDKalaignar98 , #WorldBicycleDay2021, #JagameThandhiramOnNetflix ,#LetsRakita , #Kannada ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  இன்று உலக சைக்கிள் தினம். உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லது மன ஆரோக்கியதிலும் சைக்கிள் மக்களுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உடல் எடையை குறைப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கும் சைக்கிள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

  இதனை பயன்படுத்தும் பலரும் இன்று இணையத்தில் தங்கள் சைக்கிளின் படத்தை பதிவிட்டு உலக சைக்கிள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த தினம் என்பதால் அவரை குறிப்பிட்டும் சைக்கிள் தின வாழ்த்துக்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்‌ஷாவை ஒழித்து, சைக்கிள்

  ரிக்‌ஷாக்களை வழங்கி, உழைக்கும் மக்களுக்கு சுயமரியாதை உணர்வூட்டி அவர்கள் நலன் காத்தவர் கலைஞர்என பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

  மேலும் பிரதமர் மோடி மற்றும் மஹாத்மா காந்தி இருவரும் சைக்கிள் ஓட்டிய படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #JagameThandhiramOnNetflix ,#LetsRakita .

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  ALSO READ | ஒரு குர்தாவின் விலை ரூ.2.5 லட்சமா? கொதிக்கும் நெட்டிசன்கள்!

  கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

  ஆனாலும் அந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியானது. இதனிடையே படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது 'ஜகமே தந்திரம்' படக்குழு.

  இன்று காலையில் இருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ்டேக் #HBDKalaignar98.

  கருணாநிதி, தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஆதிக்கம் மிக்க நபராகவே திகழ்ந்தார். சமூக நீதியை நிலை நிறுத்த அவர் முன்னெடுத்த பல அரசு திட்டங்களுக்காக, இன்றளவும் நினைவில் கொள்ளப்படுகிறார். திமுகவின் தலைவராக தனது இறுதிநாள் வரை பதவி வகித்த கருணாநிதி, தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஆதிக்கம் மிக்க நபராகவே திகழ்ந்தார்.

  ALSO READ |  ஆண்களுக்கே டஃப் கொடுக்கும் "பாடிபில்டர் கங்காரு" - வைரலாகும் வீடியோ!

  அண்ணா மறைவுக்குப் பிறகும், எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகும் தமிழகத்தை ஆட்சி செய்தவர் என்ற வகையில் மட்டுமின்றி, சமூக நீதியை நிலை நிறுத்த அவர் முன்னெடுத்த பல அரசு திட்டங்களுக்காக, இன்றளவும் நினைவில் கொள்ளப்படுகிறார். இன்று கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள். இவரது பிறந்த நாளை இணையத்தில் திமுக தொண்டர்கள், இணையம் பயன்படுத்துபவர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து கன்னட நெட்டிசன்கள் மத்தியில் வெறித்தனமாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #Kannada

  இந்தியாவின் அசிங்கமான மொழி எது? என்று கூகுளில் தேடும் போது கூகுள் கன்னடம் என்று பதிலைக் காட்டியுள்ளது. அதனால், ட்விட்டரில் கன்னடர்கள் கொதித்துள்ளனர். கூகுள் எப்படி எங்கள் மொழியை அசிங்கமான மொழி என்று வகைப்படுத்தலாம் என்று கண்டனங்களை எழுப்பினர்.

  இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும் என்று கன்னட நெட்டீசன்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதேநேரத்தில், உலக மொழிகளின் ராணி என்ற கேள்விக்கும் கன்னடாவைக் கூகுள் காண்பித்துள்ளது. தற்போது, மேற்கூறிய தவறை கூகுள் நிறுவனம் திருத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Twitter