Twitter Trending :'ட்ரெண்டாகும் 4கோடிவீடு...அனைத்திற்கும் அணில்தான் காரணம்' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டரில் #4கோடிவீடு , #அணில்தான்_காரணம் , #WednesdayMotivation , #InternationalOlympicDay போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

  • Last Updated :
  • Share this:
    இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #4கோடிவீடு. இந்த ஹேஷ்டேக்கில் பலரும் பாஜகசெயலாளர் ஹெச்.ராஜா குறித்து பதிவிட்டு வருகின்றனர்.காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன், தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார்.



    மேலும் அந்த பணத்தை வைத்து ரூ.4 கோடி மதிப்பில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். இதனை வைத்து ஹெச்.ராஜாவை பலரும் கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.









    தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் தடைக்கு காரணம் அணில் தான் என விளக்கமளித்துள்ளார். மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும்.



    இது போல் நேரத்தில் தான் மின் தடை ஏற்படுகின்றது என விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்திற்கு இணையத்தில் பலரும் அணிலை தொடர்பு படுத்தி பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக #அணில்தான்_காரணம் ட்ரெண்டாகி வருகின்றது.









    அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #InternationalOlympicDay.

    இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம். சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும்.



    இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன.

    கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது.









    அடுத்ததாக வழக்கம் போல ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #WednesdayMotivation . தினமும் காலையில் எழும் போது ட்விட்டர் பயன்படுத்தும் பலரும் தங்கள் காலை பொழுதை இனிமையானதாக இருப்பதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



     







    அவ்விதம் பலரும் ஆன்மீக வாதிகளின் கருத்துக்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published: