Home /News /trend /

Twitter Trending Today : 'வெளியானது சமந்தாவின் சர்ச்சை படம்... பருத்தி வீரன் நாயகிக்கு குவியும் வாழ்த்து' மனதை விட்டு நீங்காத SPB - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

Twitter Trending Today : 'வெளியானது சமந்தாவின் சர்ச்சை படம்... பருத்தி வீரன் நாயகிக்கு குவியும் வாழ்த்து' மனதை விட்டு நீங்காத SPB - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டரில் #Priyamani, #TheFamilyMan2, #SamanthaAkkineni,Angelina Jolie, #SPBalasubrahmanyam, #HappyBirthdaySPB, #FridayThoughts, #FridayFitness ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

  இன்றைய தினம் ட்விட்டரில் #Priyamani , #HBDPriyamani ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

  நடிகை ப்ரியாமணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பிரியா மணி தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை . இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது. இதனிடையே பருத்தி வீரன் புகைப்படத்தையும் பதிவிட்டு ப்ரியாமணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

   

            

      

  அடுத்த படியாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #TheFamilyMan2 #SamanthaAkkineni, #ManojBajpayee #SamanthaAkkineni .  கடுமையான எதிர்ப்புகளை மீறி ஃபேமிலிமேன் தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியானது. ஆனால் எதிர்ப்பு காரணமாக தற்போது இரண்டாம் பாகம் இந்தியில் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குறித்த விமர்சங்களும், வாழ்த்துக்களும் இன்றைய தினம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

   

      

      

  ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்தில் இன்று இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் Angelina Jolie.  ஏஞ்சலினா ஜோலி (இயற்பெயர் ஏஞ்சலினா ஜோலி வோய்ட் , பிறப்பு: ஜூன் 4, 1975) அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார்.

  ALSO READ | ஒரு குர்தாவின் விலை ரூ.2.5 லட்சமா? கொதிக்கும் நெட்டிசன்கள்!

  உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார். இவரது பிறந்த தினம் இன்று. அவர்க்கு வாழ்த்து தெரிவித்து பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அடுத்ததாக இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டேக் #SPBalasubrahmanyam , #HappyBirthdaySPB . மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75வது பிறந்தநாள் இன்று.  ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வெவ்வேறு மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது அவரின் பன்மொழி திறனுக்கு சான்று.

  ALSO READ |  பாவம் கணேசன்...பரிதாபத்தில் பாக்கியா? ஊரடங்கில் ஒரு சுற்றுலா..அஸ்வினின் அசத்தல் ஐடியா! - இன்றைய ட்ரெண்டிங் பட்டியல்

  40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி., உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் தன்வசம் கொண்டுள்ளார்.

      

            

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இசையில் என்றும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்.

  ALSO READ | ப்ரைரி நாய்யை கையில் வைத்து தாலாட்டும் சிறுமி - வைரல் வீடியோ!

  ட்விட்டரில் இன்றைய தினம் காலையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ் டேக்ஸ் #FridayThoughts , #FridayFitness, #FridayMotivation ,#fridaymorning போன்றவை.  இணையவாசிகள் தங்கள் காலை பொழுதை பெரும்பாலும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைத்தளங்களில் கழிக்கின்றனர். காலை எழுந்த வுடன் தத்துவம் அடங்கிய சிறந்த வசனங்களையும், தலைவர்களின் நல்ல கருத்துக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்விதம் இன்றைய தினம் ட்ரெண்டாகியுள்ள வெள்ளிக்கிழமை ஹேஷ்டேகில் ஒருவர் ஒரு கருத்தை மையப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  ALSO READ |  கலைஞர் புகழ் பாடும் இணையவாசிகள்...எமோஜியை கொண்டாடும் தனுஷ்

  அதில் கேப்சனோடுமகிழ்ச்சி என்பது வேடிக்கையான நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவது.எளிமையான விஷயங்கள் தான் அதிக இன்பங்களைத் தருகின்றன. என ஆங்கிலத்தில் Happiness is spending good times with craziest friends. It is the simple things that give more pleasures குறிப்பிட்டுள்ளார்.

   

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Spb, Trending, Twitter

  அடுத்த செய்தி