Twitter Trending : வலிமை படத்துக்கும் ரொம்ப தப்பு பன்னிட்டு தான் இருக்கிங்க...ட்ரெண்டாகும் சிம்பு - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ThappuPanniten ,Anurag Thakur,Indian Cinema,Om Shanti,HappyBirthdayMSDhoni,DilipKumar ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அதிகம் பகிரப்பட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் ஹேஷ்டேக் #DilipKumar.பழம் பெரும் நடிகர் திலீப் குமார் இன்று காலை காலமானார். பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார்.

    அவர் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







    திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



     





    சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 94-வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும் கால் வீங்கியதால் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே கொண்டாடினார்.



    டிசம்பரில் 99-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு காலமானார்.

    அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #HappyBirthdayMSDhoni.



    கிரிக்கெட் உலகின் கூல் கேப்டன் என கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி இன்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை கொண்டாடும் விதமாக தோனியின் சிறப்பான தருணங்களை தொகுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.











    ட்விட்டரில் தோனி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகின்றனர்.

    தப்பு பண்ணிட்டேன் (ThappuPanniten ) என்ற ஹேஷ் டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. நடிகர் சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் பாடலின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    வலிமை படத்துக்கும் ரொம்ப தப்பு பன்னிட்டு தான் இருக்கிங்க என அப்டேட் வரமால் இருப்பதால் ரசிகர் ஒருவர் இவ்விதம் கமெண்ட் செய்துள்ளார்.









    இந்த பாடலின் டீசரில் சிம்பு தனது வாய்சில், பிரிய போகிறோம் என தெரிந்து நாம் யாரும் லவ்வில் இறங்குவதில்லை என பேசுகிறார். இந்த பாடலில் நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: