முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Twitter Trending : 'அண்ணாமலை முதல் ஆலியா பட் வரை...தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

Twitter Trending : 'அண்ணாமலை முதல் ஆலியா பட் வரை...தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டரில் #InternationalDayOfYoga #WorldMusicDay ,Alia Bhatt ,#Thalapathy65FLDay,#mondaythoughts போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இன்றைய தினம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹாஷ்டேக் #Thalapathy65FLDay.நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றைக்கு மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது

வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய். அவரின் பிறந்தநாளின் போது ரசிகர்கள் கூடுதல் உற்சாகமடைந்து கொண்டாடி தீர்ப்பார்கள். இந்நிலையில் நாளைய தினம் விஜய் பிறந்த நாள் என்பதால் விஜய் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்க விடுகின்றனர்.#Thalapathy65FLDay எனும் ஹேஷ்டேகில் வாழ்த்துக்களையும், விஜயின் படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய தினம் பலரும் தங்கள் வீட்டில் யோகா செய்த படங்களை தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன் காரணமாக #InternationalDayOfYoga என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இன்று சர்வதேச யோகத்தினம்.

யோகா நம் உடலையும், மனதையும் தூய்மை படுத்தும். இதனை அனைவர்க்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் பலரும் தாங்கள் யோகா செய்த படங்களை தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அடுத்தபடியாக இன்று ட்ரெண்ண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக் WorldMusicDay. உலக இசை நாள் இன்று. இசை மன அழுத்தம் போக்கும். உடலை உற்சாகமாக வைத்திருக்கும்.

இசை இரவு தூக்கத்திற்கு நல்ல மருந்து என பலரும் இசை குறித்த தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்ததாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #mondaythoughts . ஒவ்வொரு தினத்தையும் கொண்டாடும் வகையில் ட்விட்டரில் அன்றைய நாளின் டேக் ட்ரெண்டாவது வழக்கம் அந்த வகையில் இன்று திங்கட்கிழமை என்பதால் #mondaythoughts என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

அடுத்தததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #AliaBhatt. கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது ட்விட்டரிலும் வைரலாகி வருகின்றது.

First published:

Tags: Trending, Twitter