• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Twitter Trending : நாராப்பாவா.. அசுரனா? ஷில்பா ஷெட்டியின் கணவரை கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

Twitter Trending : நாராப்பாவா.. அசுரனா? ஷில்பா ஷெட்டியின் கணவரை கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

Twitter Trending : நாராப்பாவா.. அசுரனா? ஷில்பா ஷெட்டியின் கணவரை கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

  • Share this:
    இன்றைய தினம் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ள ஹேஷ்டேக் ShilpaShetty, RajKundraArrest

    பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வெளியிட்ட குற்றத்திற்காக நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார். மும்பையில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவில் அவர் அதிரடியாக மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



    இது குறித்து மும்பை நகர காவல்துறை ஆணையரான ஹேமந்த் நகார்லே வெளியிட்ட அறிக்கையில், “மும்பை குற்றப் பிரிவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் சிலர் ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என்று புகார் வந்தது.

    இது பற்றி நாங்கள் தீவிரமாக விசாரித்தபோது இந்த ஆபாசப் பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. இது குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் திரட்டிவிட்டோம். இதன் பின்புதான் அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்..” என்று கூறியுள்ளார்.இதன் காரணமாக ட்விட்டரில் ShilpaShetty ,RajKundraArrest ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி உள்ளது.











    #EidMubarak ஹேஷ்டேக் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்த படுகின்றது. இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகு உள்ளது.

     





    இஸ்லாமியார்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தற்போது இருந்தே ட்விட்டரில் #EidMubarak ஹேஷ்டேக் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்த படுகின்றது. இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகு உள்ளது.



    ட்விட்டரில் Asuran , தனுஷ் ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப் படுகின்றனர். நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கு ரீமேக்கில் வெளியானது.



    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

    'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாராப்பா' ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் குறித்து ட்விட்டரில் பிரபலங்களும், ட்விட்டர்வாசிகளும் தொடர்ந்து பதிவிட்டு உள்ளனர்.











    VaccinePassports ஹேஷ் டேக் அடுத்ததாக ட்ரெண்டாகி வருகின்றது. கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட் வேண்டும் என சிலரும், இந்த நடைமுறை தேவையற்ற ஒன்று என சிலரும் இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.



    கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் `தடுப்பூசி பாஸ்போர்ட்' என்ற விஷயம் மீண்டும் உருவெடுத்துள்ளது. பல நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட் அல்லது டிஜிட்டல் ஹெல்த் பாஸ்போர்ட் என்ற விஷயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.









     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: