• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Twitter Trending : 'இந்திய அளவில் ட்ரெண்டாகும் ரஜினிகாந்த்,வலிமை அப்டேட்...நீதி கேட்கும் கேரள பெண்கள்' - இன்றைய ட்ரெண்டிங்

Twitter Trending : 'இந்திய அளவில் ட்ரெண்டாகும் ரஜினிகாந்த்,வலிமை அப்டேட்...நீதி கேட்கும் கேரள பெண்கள்' - இன்றைய ட்ரெண்டிங்

 ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் Rajinikanth ,MondayVibes MondayMotivation,JusticeforKeralagirls,ValimaiMotionPoster ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

 • Share this:
  ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டாகி உள்ள ஹேஷ்டேக் #ValimaiMotionPoster

  வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டு விட்டது என்றும், இந்த ஆண்டு இறுதியில் "வலிமை" திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தைப் பற்றிய தகவலுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருந்த நிலையில், படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளது. வலிமை மோஷன் போஸ்டரை, படத்தின் முதல் தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

   

  ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் H. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார்.  கே.கதிர் கலை இயக்கம் செய்ய, , அனு வர்தன் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.2021 ஆம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் தமிழ் படமான "வலிமை" படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர்.

   

  படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, வைரலாக பரவி வருகிறது,

  #RajiniMakkalMandram ஹேஷ்டேக் அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது. உடல்நலனை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த பின்னர், முதல்முறையாக தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் இன்றுசந்தித்தார்.  இதற்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு செல்வதற்கு முன்பாக போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தங்களது ஆதர்ச நாயகனைக் கண்ட ரசிகர்கள் மலர்தூவி வரவேற்பு தெரிவித்ததுடன், தேங்காயும் உடைத்தனர்.

  இந்நிலையில் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்பட முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.  கால சுழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் , இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.  #JusticeForKeralaGirls ஹேஷ்டேக் அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 6 வயது சிறுமி மர்மமான விதத்தில் உயிரிழந்தார்.  உடற்கூராய்வில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எங்கே நீதி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  வழக்கம் போல ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் பலரும் காலை வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: