Home /News /trend /

Twitter Trending : ட்ரெண்டாகும் ராகுல் காந்தி...எளிமையான தலைவர் என புகழாரம் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

Twitter Trending : ட்ரெண்டாகும் ராகுல் காந்தி...எளிமையான தலைவர் என புகழாரம் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

 இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 5YearsOfSultan ,RahulWasRight ,TuesDayMotivation,HappyBirthdayRanveerSingh ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

  கடந்த 2016ம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான திரைப்படம் சுல்தான்.அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியது.
  யஷ் ராஜ் பிலிம்ஸ் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரித்த இப்படத்தில் அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் உலக மல்யுத்த சாம்பியனை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை கொண்டாடும் வகையில் #5YearsOfSultan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படுகின்றது.  அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ள ஹேஷ்டேக் #RahulWasRightஇணையவாசிகள் மாற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இந்த டேகில் பதிவிட்டு வருகின்றனர்.  ராகுல் காந்தி தான் சரி என இந்த டேகில் ராகுல் காந்தி பேசிய வீடியோக்களும் அவரது புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றது.

  வழக்கம் போல இன்றைய தினம் #TuesDayMotivation என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது.  இதில் இன்றைய தினம் ட்விட்டரில் பகிரப்படும் காலை வணக்கம், வாழ்த்துக்கள் , தத்துவங்கள் பகிரப்படுகின்றன.

  சமையல், அழகுக்குறிப்பு, ஃபிட்னெஸ் போன்றவற்றில் தான் அதிக யூ-ட்யூபர்களின் கவனம் இருக்கிறது. குறிப்பாக சமையலில் சொல்லவே வேண்டாம், அவ்வளவு சேனல்கள். அதில் முக்கியமான ஒன்றாக வில்லேஜ் குக்கிங் சேனலை சொல்லலாம். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரோடு கலந்துகொண்டு அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை சாப்பிட்டு பாராட்டினார்.

  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், யூடியூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனலை' நடத்தி வருகிறார்கள். ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும் இந்த சேனல் பெற்றுள்ளது. அதோடு தென்னிந்தியாவிலேயே முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனல் என்ற மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொண்டனர்.

  இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் ரூ 10 லட்சம் நன்கொடையளித்துள்ளனர். இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.நேற்றைய தினம் இது குறித்த டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்த போது இன்றும் வாழ்த்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.  #HappyBirthdayRanveerSingh எனும் ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.  ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பை இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னனி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.இன்று இவரது பிறந்த தினம் என்பதால் திரை பிரபலங்கள், இணையவாசிகள்,ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Twitter

  அடுத்த செய்தி