• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Twitter Trending : 'மெஸ்ஸி,மணிசர்மாவுக்கு குவியும் வாழ்த்து' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

Twitter Trending : 'மெஸ்ஸி,மணிசர்மாவுக்கு குவியும் வாழ்த்து' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் International Trophy ,Ronaldo,Messi,SundayThoughts,RRRMovie ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டாகி உள்ள ஹேஷ்டேக் #Messi. கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் ஆனது.

    மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டீனா வெல்லும் முதல் பெரிய கோப்பையாகும் இது. இதனை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் மெஸ்ஸி ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது.

     



     

















    #ManiSharma என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.



    இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும். தமிழில் இவர் யூத், மலை மலை,வெற்றிச்செல்வன், ஏழுமலை, திருப்பாச்சி, ஷாஜகான், சுறா, போக்கிரி ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.











    #WorldPopulationDay ஹேஷ்டேக் இன்று உலக அளவில் ட்ரெண்டாகி உள்ளது. உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.



     







    #SundayThoughts என்ற ஹேஷ்டேக் இன்று ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. விடுமுறை நாளான இன்று பலரும் உற்சாகமாக தங்கள் காலை பொழுதை துவங்கி உள்ளனர்.



     



    பாகுபலிக்குப் பிறகு மிகப்பிரமாண்டமாக ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் இந்தப் படத்தில் அலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி போன்றவர்களும் நடிக்கின்றனர். இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை கற்பனை சேர்த்து விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதைதான் ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் படமாகிறது.



    இதில் ஒரு பாடல் காட்சியை இதுவரை இந்திய சினிமா பார்த்திராதவகையில் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலின் படப்பிடிப்புக்காக மட்டும் 30 நாள்களை ஒதுக்கியுள்ளாராம் ராஜமௌலி. 2022 ஜனவரி ஆர்ஆர்ஆர் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாக உள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் #RRRMovie என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.











    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: