TwitterTrending : 'தோனிக்கு குவியும் பாராட்டு...பெருமூச்சு விடும் அஜித் ரசிகர்கள் ' - ட்விட்டர் ட்ரெண்டிங் டுடே!

ட்விட்டர் ட்ரெண்டிங் டுடே

இன்றைய தினம் ட்விட்டரில் Dhoni,RaviShastri,AKValimaiFLSoon, Valimai,ajith போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

 • Share this:
  இன்றைய தினம் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #Dhoni.கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டி20 உலகக்கோப்பை (2007), 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை (2011), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) என 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனிதான்.2013- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நாள் இன்றைய தினம்தான். இங்கிலாந்துடனான இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மழை காரணமாக 20 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டது.

  முதலில் இந்திய அணியை இங்கிலாந்து ஏட் செய்ய அழைத்தது. தோனியே டக் அடிக்க இந்திய பேட்ஸ்மென்கள் சரியாக் ஆடவில்லை. விராட் கோலி மட்டுமே 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார், இந்தியா 129/7 என்ற குறைந்த ஸ்கோரைத்தான் எடுக்க முடிந்தது. ஷிகர் தவான் 24 பந்துகள்ல் 31 எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 25 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார்.

  சரி இங்கிலாந்து சுலபமாக வென்று விடும் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள் ஆனால் அலிஸ்டர் குக் தலைமை இங்கிலாந்துக்கு சோதனை காத்திருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 124/8 என்று முடிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டது. இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை அதாவது இயான் மோர்கன், ரவி பொபாராவை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த இங்கிலாந்தின் சரிவுக்கு இது ஆரம்பமானது.  ஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.இந்த சாதனையைத்தான் ஐசிசி இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட அதற்கு பதில் அளித்த ஸ்டூவர்ட் பிராட், ‘5ம் நாள் டெஸ்ட் பிட்ச் போல் அப்படி ஸ்பின் ஆனது’ என்று பதிவிட்டுள்ளார். தோனியின் இந்தச் சாதனையை ஐசிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

  இதன் காரணமாக ட்விட்டரிலும் #Dhoni என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த டேக்கில்தோனி ரசிகர்கள் விராட்கோலியுடன் அவரை ஒப்பிட்டு பதிவிட்டும், தோனிக்கு பாராட்டு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

  அடுத்ததாக ட்ரெண்ட் செய்யப்படும் ஹேஷ்டேக் #RaviShastri.

  இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நியூசிலாந்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் "சிறந்த அணி வெற்றிப் பெற்றுள்ளது. உலகக் கோப்பைக்கான நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு தகுதியான வெற்றியாளர்களாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. மாபெரும் சாதனைகளை அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. நன்றாக விளையாடினார்கள். மரியாதை அளிக்கிறேன்" என்று நறுக்கென்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.  அடுத்ததாக அஜித் ரசிகர்களால் அதிகம் ட்ரெண்ட் செய்யப்படும் ஹேஷ்டேக் #AKValimaiFLSoon, #Valimai.

  ஜூலை மாத இறுதியில் நடிகர் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வலிமை திரைப்பட அப்டேட் வேண்டி நாடு நாடாக கொடி பிடித்த அஜித் ரசிகர்களுக்கு தற்போது யுவன் சங்கர் ராஜா வாயிலாக சமீபத்தில் ஒரு அப்டேட் கிடைத்தது.

  வலிமை திரைப்படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் யுவன்சங்கர்ராஜா தெரிவிக்க உற்சாகத்தில் துள்ளி குதித்தனர் அஜித் ரசிகர்கள்.  கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அஜித்குமார் நடித்து வெளியான வரலாறு திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தாயை காக்கும் மகனா’ என்ற பாடல் அஜித்தின் ஆகச்சிறந்த அம்மா சென்டிமென்ட் பாடலாக இருக்கும் நிலையில் அதனை மிஞ்சும் ஒரு பாடலாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

  வலிமை திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட் கிடைத்துவிட்டதால், அடுத்தடுத்து அப்டேட் கொடுத்தும் வெறுப்பேற்றும் விஜய் ரசிகர்களை சிறிது காலம் சமாளிக்க ஒரு சாக்கு கிடைத்தது என்று தற்பொழுது பெருமூச்சுவிட தொடங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: