Twitter Trending : ட்விட்டர் ட்ரெண்டிங்கில் போட்டி போடும் தல-தளபதி ஹேஷ்டேக்குகள்

ட்ரெண்டிங்கில் போட்டி போடும் ஹேஷ்டேக்குகள்

இன்றைய தினம் ட்விட்டரில் #ThankfulTuesday , Happy Birthday Thalaiva,#Tuesdayvibe , #Tuesdaymotivations ,#HappyBirthdayThalapathy,#BeastSecondLook,#ThalaAjith,#தளபதி_விஜய், #HappyBirthdayKavin ,#தன்னிகரற்ற_தலஅஜித் போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

  • Share this:
    #HappyBirthdayThalapathy , #தளபதி_விஜய் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகியுள்ளது. நடிகர் விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு இணையத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், இணையவாசிகள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் என்பதைத் தாண்டி தளபதி என ரசிகர்களால் தலைமேல் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜயை, தங்கள் வீட்டுப் பிள்ளையாக, வீட்டிலுள்ள அண்ணனாக திரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் தன் கடின உழைப்பால் தவிர்க்கமுடியாத நடிகர் ஆகிவிட்ட நடிகர் விஜய் தனது 27 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 65 திரைப்படங்களில் நடித்து சரி பாதிக்கும் மேலாக வெற்றித் திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.



    துப்பாக்கி, மெர்சல் சர்க்கார், மாஸ்டர் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியும், பிகில் திரைப்படத்தின் மூலம் 300 கோடி வசூல் என்ற புதிய உச்சத்தையும் எட்டியுள்ள நடிகர் விஜய் நடிப்பில் 65வது திரைப்படமாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் விஜயின் திரைப்பட அனுபவங்கள், வாழ்த்துக்கள், எடிட் செய்யப்பட்ட அவரது போடோக்கள், அவரது இளம் வயது புகைப்படம் என அனைத்தையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.















    அடுத்த படியாக விஜய் ஹேஷ்டேக் ட்ரெண்டனாலே போட்டியாக தல ஹேஷ்டேக் ட்ரெண்டாவதும், தல அஜித் ஹேஷ்டேக் ட்ரெண்டாகினால் தளபதி விஜய் ஹேஷ்டேக் ட்ரெண்டாவது ட்விட்டரில் சகஜமப்பா என்பன போல் ஆகி விட்டது. இன்று தளபதி டேகிற்கு நிகராக அடுத்த இடத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #தன்னிகரற்ற_தலஅஜித் மற்றும் #thalaajith.

    நீண்ட போராட்டத்துக்கு பிறகு நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான வலிமை அப்டேட்டை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வழங்கியுள்ளார். எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை.



    இப்படத்தின் அப்டேட்டை கேட்டு அஜித் ரசிகர்கள் டிவிட்டர் தொடங்கி கிரிக்கெட் மைதானங்கள் வரை கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்தநிலையில் மாநாடு படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக கிளப்ஹவுஸ் சாட்டில் வந்த யுவன் சங்கர் ராஜா புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார். அதில் வலிமை திரைப்படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் மற்றும் படத்தின் தொடக்கப் பாடல் சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.











    அடுத்ததாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #HappyBirthdayKavin . பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் மக்கள் மனம் வென்ற நடிகர் கவினுக்கு பிறந்த நாள் இன்று. அவரது ரசிகர்கள் இணயத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ALSO READ |  'விஜய்யின் அடுத்த படம் 'பீஸ்ட் ... ப்ரோ பாத்தீங்களா இலுமினாட்டி சிம்பல்'...இன்றைய தினம் வைரலாகும் மீம்ஸ்

    2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் என்ற தொடரில் 'சிவா' என்னும் கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி (2012-2013), தாயுமானவன் (2013-2014), போன்ற தொடர்களில் நடித்தார்.



    2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் என்பவர் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.











    அடுத்ததாக இன்று முதல் இடத்தில் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முந்திக்கொண்ட ஹேஷ்டேக் #BeastSecondLook . விஜய்க்கு போட்டி விஜய் தான் என்பன போல் #HappyBirthdayThalapathy என்ற ஹேஷ் டேக்கும் #BeastSecondLook என்ற ஹேஷ்டேக்கும் முதலிடத்தில் மாறி மாறி வந்து கொண்டு இருக்கின்றது. நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



    தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜயின் 65வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரான செல்சன் இயக்குகிறார். படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

    மாஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துவரும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அவரது புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.











    கடைசியாக #ThankfulTuesday என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.



    இன்றைய தினம் செவ்வாய் கிழமை என்பதால் பலரும் இன்றைய தினம் காலை முதல் காலை வணக்கம், வாழ்க்கை தத்துவங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை இதில் பகிர்ந்து வருகின்றனர்.





    இன்றைய நாளுக்கு நன்றி கூறி இந்த டேக் ட்ரெண்டாகி வருகின்றது.
    Published by:Sankaravadivoo G
    First published: