• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Twitter Trending : சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் வலிமை...சிறுவனின் இதயத்தில் விஜய் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

Twitter Trending : சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் வலிமை...சிறுவனின் இதயத்தில் விஜய் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #வலிமைதிருவிழா, #ValimaiUpdate ,#Bigil ,Gadkari,#HealthMinister ,#HappyBirthdayDada,#PetrolDieselPrice ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் ஒரு முறை கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை.

    ஸ்ரீதேவியின் மறைவின்போது அவரது கணவரான போனி கபூர் தயாரிப்பில், 2 திரைப்படம் நடித்துக் கொடுக்க சம்மதித்த அஜித் முதல் திரைப்படமாக நேர்கொண்ட பார்வையும், இரண்டாவதாக வலிமை திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    அண்மையில் ட்விட்டரில் வலிமை திரைப்படம் தொடர்பாக சாமியாடுபவரிடம் அஜித் ரசிகர்கள் குறி கேட்ட வீடியோ வைரலாக பரவியது.







    இந்நிலையில் இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் #வலிமைதிருவிழா, #ValimaiUpdate என்ற ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.



     









    யூரோ கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை ஏந்தியுள்ளனர். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை வைத்து சர்வதேச அளவில் வலிமை ட்ரெண்டாகி விட்டதாக மீம்ஸ்களும் வைரலாகி உள்ளது.

    அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ள ஹேஷ்டேக் #Bigil .



    விபத்தில் காயமடைந்து வலியால் துடித்த சிறுவனுக்கு நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை போட்டுக்காட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.







    விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் போராடிய சிறுவன், ஊசி போட்டுக்கொள்ளவே அஞ்சிய நிலையில் அவரை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு பிடித்தமான நடிகர் விஜயின் பிகில் படத்தை போட்டுக்காட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.





    இந்த செய்தியை அறிந்த நடிகர் விஜய் ரசிகர்கள் பிகில் டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் Gadkari, #HealthMinister.



    புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் மன்சுக் மாண்ட்வியாவுக்கு சுகாதார அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் இந்த ஹேஷ் டேக் வைரலாகி உள்ளது. இதில் பலரும் மன்சுக் மாண்ட்வியாவின் பழைய ட்விட்களையும், அவருக்கு வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.



    #PetrolDieselPrice ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 101 ரூபாயைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் 31 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 6 காசுகளாக உள்ளது.



     

    இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 6 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மற்றும் உதகையில் பெட்ரோல் விலை இன்று 103 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. மதிப்புக் கூட்டு வரி வித்தியாசம் காரணமாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பெட்ரோல் விலையில் மாற்றம் நிலவுகிறது







    #HappyBirthdayDada என்ற ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.சௌரவ் சந்திதாஸ் கங்குலியின் பிறந்த தினம் இன்று. தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். இவருக்கு பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: