Vice President Venkaiah Naidu : குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்

வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்

இன்றைய தினம் ட்ரெண்டிகள் உள்ள ஹேஷ் டேக் "Vice President of India"

  • Share this:
    குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை குடியரசுத் தலைவர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

    குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றார். ஒன்று அவரது சொந்த அக்கௌன்ட் , மற்றொன்று அலுவலக ரீதியில் பயன்பாட்டில் உள்ள அக்கௌன்ட். இதில் அவரது பெயரில் அவருக்கென உள்ள தனிப்பட்ட அக்கௌண்டில் ( @MVenkaiahNaidu ) 1.3 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

    மற்றொன்று அலுவல் ரீதியான பக்கத்தில் ( @VPSecretariat ) 931K பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இதில் அவரது தனிப்பட்ட அக்கௌன்ட்டில் உள்ள ப்ளூ டிக்கை ட்விட்டர் நீக்கம் செய்துள்ளது. இதற்கு இணையத்தில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

     

     



     

     



     

    இவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டதற்கு இணையவாசிகள் ட்விட்டருக்கும், மத்திய அரசிற்கும் போட்டி நிலவி வருவதாகவும், எதன் அடிப்படையில் நீக்கினீர்கள்.. விளக்கம் ஏதும் ட்விட்டர் தெரிவித்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     

     



     

     



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ட்விட்டர் சரிபார்க்கும் கணக்குகளில் அரசாங்க நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பு, செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கேமிங், ஆர்வலர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்கள் உள்ளனர். சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் தனது விதிகளில் ஒன்றாக வைத்துள்ளது.

    நீல சரிபார்ப்பு பேட்ஜ் ட்விட்டர் பயனரின் அடையாளம் உண்மை மற்றும் நம்பகமானது என்று மற்ற பயனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ட்விட்டர் தன்னை உறுதி செய்துள்ளது, இதனால் சரிபார்ப்பு பேட்ஜ் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை மற்ற பயனர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், நம்பகத் தன்மைகாகவும் இந்த ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகின்றது.

     



     

     



     

    வெங்கையா நாயுடு இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

    ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: