சீனாவைத் தடுக்க முடியவில்லை, விவசாயிகள் போராட்டத்துக்கு தடுப்பு வேலியா? : ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன பாஜக கோழை ஹேஷ்டேக்

சீனாவைத் தடுக்க முடியவில்லை, விவசாயிகள் போராட்டத்துக்கு தடுப்பு வேலியா? : ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன பாஜக கோழை ஹேஷ்டேக்

பிரதமர் மோடி.

விவசாயிகளுடன் பேச தயார் என பிரதமர் மோடி கூறினார் ஆனால் இதுவரை பேச முன்வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்றனர்.

 • Share this:
  சீனாவுக்கு எதிரான எல்லை பிரச்சினை, படைகள் வாபஸ், விவசாயிகள் பிரச்சனைகளில் தீர்ப்பதில் இழுபறி உள்ளிட்ட பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி ‘கோழை பாஜக’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

  வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர், பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை ஆகிய முக்கியமான பிரச்சனைகளை விடுத்து முதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு பாஜக அரசு செயல்படுவதாக இந்த ஹேஷ்டேக்கின் மூலம் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

  விவசாயிகள் போராட்டம் சமூகவலைதளமான டுவிட்டரிலும் தினம் ஒரு ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் நேற்று ‘கவார்ட் பாஜக’  என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது

  இந்த ஹேஷ்டாக்கில் பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி டுவிட்டர் தளவாசிகள் ஆளும் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடான சீனா எல்லையில் ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் அவர்களை தடுக்காமல் இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகளில் தடுப்புவேலிகள், தற்காலிக தடுப்பு சுவர்கள் எழுப்பியதை சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர்.

  விவசாயிகளுடன் பேச தயார் என பிரதமர் மோடி கூறினார் ஆனால் இதுவரை பேச முன்வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்றனர். மேலும் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டதை நேற்று காங்கிரஸின் ராகுல் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். இதை சுட்டிக்காட்டியும் பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். சீனாவிற்கு பயந்து எல்லையில் படைகளை வாபஸ் பெற்றது. விவசாயிகளை நேரடியாக எதிர்க்க முடியாமல் கோழைத்தனமாக செயல்படுகிறது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டரில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் விஷமங்களை பரப்புகின்றனர். அவர்களின் டுவிட்டர் கணக்கை முடக்கியதை கூட சுட்டிக்காட்டி கோழை பா.ஜ. அரசு என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

  இதோடு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தாமல் பணக்கார கார்பரேட் முதலாளிகளை பகைத்து கொள்ள கூடாது என அவர்களுக்கு பயந்து எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ள மறுக்கிறது என சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

  இதுபோன்று பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் முடிவு உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் ‘கவார்டு பாஜக’ என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
  Published by:Muthukumar
  First published: