Home /News /trend /

சைக்கிளில் உணவு டெலிவரி செய்வதருக்கு ட்விட்டர் மூலம் கிடைத்த பரிசு..

சைக்கிளில் உணவு டெலிவரி செய்வதருக்கு ட்விட்டர் மூலம் கிடைத்த பரிசு..

சோமேட்டோ

சோமேட்டோ

ராஜஸ்தானின் கடுமையான வெப்பத்தில் துர்கா சைக்கிளை பயன்படுத்தி சரியான நேரத்தில் உணவை எவ்வாறு வழங்கி வருகிறார் என்பதைப் பற்றி குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட்டின் உதவியுடன் எதையும் சாதிக்க முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது. இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தனது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். அதே போன்று இதை மோசமான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையை தொலைத்தவர்களும் உள்ளனர். மேலும் இன்டர்நெட்டை பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியவர்களும் இங்கு உள்ளனர். இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் தான் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு நடந்துள்ளது.

சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி மேனாக ராஜஸ்தானை சேர்ந்த துர்கா மீனா என்பவர் பணி புரிந்து வருகிறார். ஒரு காலத்தில் இவர் ஆசிரியராக இருந்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக இவர் கற்பித்து வந்துள்ளார். பிறகு கொரோனா பெருந்தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் தனது வேலையை இவர் இழந்தார். தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக, சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொண்டார்.

தற்போது இவர் சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இவர் சைக்கிளில் டெலிவரி செய்வதை கவனித்த ஆதித்யா ஷர்மா என்பவர் அவரைப் பற்றி முதன்முதலில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தானின் கடுமையான வெப்பத்தில் துர்கா சைக்கிளை பயன்படுத்தி சரியான நேரத்தில் உணவை எவ்வாறு வழங்கி வருகிறார் என்பதைப் பற்றி குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.



மேலும் தனது ட்விட்டர் பதிவில் ஆதித்யா, "அவர் தனது B.COM இளங்கலை படிப்பை முடித்துள்ளார், மேலும் M.COM-ஐ படிக்க விரும்புகிறார், ஆனால் அவரது நிதி நிலைமை காரணமாக, அவர் தற்போது சோமேட்டோவில் பணியாற்றத் தொடங்கி உள்ளார். அவருக்கு இணையத்தைப் பற்றி எல்லாம் தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், துர்கா மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த விரும்புவதாகவும், லேப்டாப் மற்றும் பைக்கிற்காக சேமித்து வருவதாகவும் அதில் கூறியுள்ளார்.

also read : தாகத்தால் தவித்த குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ



also read : ஒரே கையால் பைன் மர போர்டுகளை உடைத்து கின்னஸ் உலக சாதனை செய்த ஜோடி..

அதே போன்று "தனக்கு தேவையானவற்றை வாங்குவதற்கான முன்பணத்தை உங்களால் தர முடியுமென்றால், மீதமுள்ள பணத்தை இ.எம்.ஐ மூலம் நானே செலுத்து விடுவேன், மேலும் உங்கள் முன்பணத்தை வட்டியுடன் 4 மாதங்களுக்குள் திருப்பித் தருகிறேன்" என்று துர்கா கூறியதாக ஆதித்யா தனது ட்விட்டரில் இதையும் பதிவிட்டுள்ளார். துர்காவின் நிலையை அறிந்து கொண்ட ஆதித்யா அவரது பைக்கிற்கான நிதி திரட்டும் வேலையை தொடங்கினார்.



சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேவையான பணம் மற்றவர்கள் அளித்த நிதியின் மூலம் கிடைத்து விட்டதாக ஆதித்யா கூறினார். அதன் பிறகு அவருக்கு தேவையான வண்டியை அந்த பணத்தை பயன்படுத்தி வாங்கி தந்துள்ளனர். கடந்த ஆண்டில் இன்டர்நெட் எப்படி பலருக்கு உயிர்நாடியாக மாறியது என்பதை நினைவூட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. ஆண்டின் முதல் பாதியில், குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் தொற்றுநோயின் இரண்டாவது அலை அதிகரித்த போது, ட்விட்டர் தளமானது பலரின் நம்பிக்கைக்குரிய இடமாக உருவெடுத்தது.

கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் பலருக்கும் இருந்த பல்வேறு தேவைகளை வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் மூலம் முடிந்த வரையில் நிவர்த்தி செய்ய முடிந்தது. சமூக ஆர்வலர்கள் மற்றும் நல்ல மனிதர்களின் அயராத முயற்சியால் பல தரப்பட்ட மக்களின் கோரிக்கைகள் சில மணி நேரங்களில் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Zomato

அடுத்த செய்தி