சமூக வலைதளத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பாடகி மீது விமர்சனம்...!

சமூக வலைதளத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பாடகி மீது விமர்சனம்...!
ரணு மோண்டல்
  • News18
  • Last Updated: November 7, 2019, 10:14 AM IST
  • Share this:
சமூக வலைதளத்தின் மூலம் சினிமா படங்களில் பாடும் வாய்ப்பை பெற்ற ரானு மோண்டல் என்ற பெண், தனது சமீபத்திய நடவடிக்கையால் அதே சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண்மணி பாடிய பாடல், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஏக் பியார் கா நக்மா ஹே’ என்ற இந்தி பாடலை அவர் பாடியிருந்தார்.

குரலில் இருந்த இனிமையால் மேலும், இந்த வீடியோ இணையத்தில் பரவி, கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்ததால், ஒரே நாளில் ராணு நாடு முழுவதும் பிரபலமானார்.


இதனை அடுத்து அவருக்கு பாலிவுட் படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்தன. தற்போது, மிகப்பிரபலமான ஒருவர் ஆகிவிட்டதால் ராணு மோண்டல் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் போகும் இடங்களில் பலரும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், எந்த சமூக வலைதளம் மூலமாக புகழின் உச்சிக்கு ராணு சென்றாரோ, அதே சமூக வலைதளம் மூலமாக தற்போது அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சமீபத்தில் ஷாப்பிங் சென்ற ராணுவை, பெண் ஒருவர் மேலே தொட்டு அழைத்துள்ளார். இதனால், கடுப்பான ராணு, “என்ன இது...? மேலே கை வைத்துதான் கூப்பிடுவீர்களா?.. நான் இப்போது பிரபலம்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவ, பலரும் ராணுவை விமர்சித்து வருகின்றனர்.

Also See...

First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்