#BoycottWindows ஹேஷ்டேக் பதிவிடுவோரைக் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..!

ட்விட்டரில் "CEO of Infosys" "Microsoft" மற்றும் "#SatyaNadella" ஆகிய ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.

#BoycottWindows ஹேஷ்டேக் பதிவிடுவோரைக் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..!
சத்யா நாதெல்லா
  • News18
  • Last Updated: January 14, 2020, 5:05 PM IST
  • Share this:
மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா குடியுரிமைச் சட்டத்தை விமர்சனம் செய்ததால் அவருக்கு எதிராக #BoycottWindows என்ற ஹேஷ்டேக் ஒருபுறம் ட்ரெண்ட் ஆகி வருவது நமது இந்தியாவின் ‘புற்றுநோய் மனப்பான்மை’ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.



ட்விட்டரில் "CEO of Infosys" "Microsoft" மற்றும் "#SatyaNadella" ஆகிய ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. அனைத்தையும் இணையத்தின் வழியாகப் பேசுவது மட்டுமே தற்போதைய இந்தியாவின் கலாசாரமாக மாறு வருகிறது என்றும் இந்தியாவின் ‘புற்றுநோய் மனநிலை’ இது என்றும் ஒருசாரர் தெரிவித்து வருகின்றனர்.


சமீபத்தில் கூட தீபிகா படுகோனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க BoycottLux என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இத்தகைய மனநிலை இந்தியாவில் அதிகரித்துக் காணப்படுவது மிகவும் மோசமானது என்றும் பலர் ட்விட்டரிலேயே ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளனர்.





மேலும் பார்க்க: குடியுரிமைச் சட்டத்தை விமர்சித்த மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெல்லா..!- குவியும் பாராட்டுகள்
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்