கருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் ட்விட்டர்... ப்ரொபைல் பிக்கை மாற்றி எதிர்ப்பு
கருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் ட்விட்டர்... ப்ரொபைல் பிக்கை மாற்றி எதிர்ப்பு
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ twitter support என்ற ட்விட்டர் பக்கத்தில், கருப்பு வண்ண ப்ரோபைல் படத்தை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்களது பயோவில் BlackLivesMatter என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவரை சாலையில் கிடத்திய போலீஸ் ஒருவர், கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தி தாக்குதல் நடத்தினார். இதனால், அந்த கருப்பின இளைஞர் உயிரிழந்தார்.
இதைக் கண்டித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறை வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு தீவைத்து வன்முறையும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே ட்விட்டரில் #USAonFire என்ற ஹேஸ்டேக்கில் அமெரிக்காவில் நடக்கும் நடக்கும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் நிறுவனமும் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், கருப்பு வண்ண புகைப்படத்தை வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களது பயோவில் BlackLivesMatter என குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.