டிவிட்டரின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டார்சியை தோற்கடித்து டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பராக் அகர்வால் பொறுப்பேற்று சில மாதங்கள் தான் ஆகிறது. டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக அவ்வளவு எளிதாக பராக் அகர்வால் தேர்வு செய்யப்படவில்லை. பல ஆண்டுகள் டிவிட்டரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் அகர்வாலும் ஒருவர்.
டிவிட்டருடன் ஒரு கடுமையான பனிப் போரை எதிர்கொண்டு வந்த எலான் மஸ்க் ஒரு வழியாக ட்விட்டரை 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கிவிட்டார். கருத்து சுதந்திரம் இல்லை, பதிவுகளை திருத்துவதற்கு வசதி இல்லை என்று தொடர்ந்து ட்விட்டர் மீது குற்றச்சாட்டு பகிர்ந்து வந்த எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன் டிவிட்டரின் கணிசமான பங்குகளை வாங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது ட்விட்டரையே வாங்கிவிட்டார். டிவிட்டர் இனி ஒரு தனிமனிதரின் சொத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு டிவிட்டர் யூசராக பல தரப்பட்ட யூசர்களின் குரலாக இருந்த எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தின் முதலாளியாக ஊழியர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், டிவிட்டருக்கு தலைமை மாறப்போகிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த புதிய ஒப்பந்தம் நிறைவு செய்யப்படும் வரை அகர்வால் தான் இதே பொறுப்பில் தொடர்வார். அதற்கு பின்பு தலைமை மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் ஆகியவற்றை நானே சொந்தமாக நிர்வகிப்பதால் ட்விட்டரையும் தனது தலைமையில் நடத்தலாம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த டீல் முடிந்து நிறுவனம் சட்டப்படி எலான் கைக்குச் செல்லும் வரை தலைமைப் பொறுப்பில் அகர்வால் இருப்பார்.
இந்நிலையில், பலரும் பராக் அகர்வாலுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பராக் அகர்வால் பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறார். தற்போது தலைமை பொறுபேற்றுக் கொண்ட அகர்வாலை நீக்குவது முறையாகாது என்று கூறி வருகின்றனர். பராக் அகர்வாலும், உடனடியாக எந்த மாற்றமும் நடைபெறாது. ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று கூறி வருகிறார்.
அதே போல, என்னைப் பற்றி என்னுடைய வேலையைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் வருத்தப்படுவது, டிவிட்டரின் எதிர்காலம் பற்றி தான் என்று வருத்தமாக தெரிவித்துள்ளார் பராக் அகர்வால்.
அதே நேரத்தில், சமீபத்திய அறிக்கைகளின் படி, நிறுவனத்தின் ஒப்பந்தங்களின் அடிப்படையில், புதிய பொறுப்பேற்றுக் கொண்ட 12 மாதங்களுக்குள் அகர்வாலை பணி நீக்கம் செய்ய முடியாது. தற்போதை தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வாலை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தால், $43 மில்லியன் வழங்க வேண்டும். ஏற்கனவே, கணிசமான தொகையை கடன் வாங்கி டிவிட்டரை சொந்தமாக்கியுள்ள எலான், அகர்வாலை பணி நீக்கம் செய்வாரா என்பது சந்தேகம் தான்!
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.