’மனிதம் எஞ்சியிருக்கிறது’ கம்பீரமாக நடந்து வந்த யானை - நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ்

யானை

இந்த சம்பவமானது வடகிழக்கு ரயில் கோட்டத்துக்குட்பட்ட நாக்காட்டா - சல்சா பகுதியில் நடந்துள்ளது.

  • Share this:
தண்டவாளம் அருகே கம்பீரமாக யானை ஒன்று நடந்து வந்ததைப் பார்த்து, ஓட்டுநர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய வீடியோ இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இணைய முழுவதும் நிரம்பி வழியும் வீடியோக்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதையும், அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படு நிற்கதியாக விடப்படும் கண்ணீர் காட்சிகளையும் பார்க்கும்போது மனது பதைபதைக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களும், அநீதிகளும் தொடர்ந்து அரங்கேறி இந்நாளில், மனிதாபிமானமுள்ள அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் மனதுக்கு நிறைவைக் கொடுக்கும் ஒரு வீடியோ இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், வனப்பகுதி வழியே செல்லும் தண்டவாளத்தின் அருகில் யானை ஒன்று கம்பீரமாக நடந்து கொண்டிருக்கிறது. யானை இருப்பதை சிறிது தொலைவிலேயே பார்த்துக் கொண்ட ரயில் ஓட்டுநர், உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கைப் பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளார்.

  

சிறிது நேரம் அப்படியே நிற்கும் ரயில், யானை மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிய பின்னர் அந்த இடத்தைக் கடக்கிறது. இந்த சம்பவமானது வடகிழக்கு ரயில் கோட்டத்துக்குட்பட்ட நாக்காட்டா - சல்சா பகுதியில் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி 5.45 மணிக்கு கஞ்சனா கன்யா ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றுள்ளது.

வனப்பகுதி வழியே செல்லும்போது, அந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய ஓட்டுநர் டோராய், தண்டவாளத்தின் அருகில் யானை நிற்பதை கண்டுகொண்டார். உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கைப் பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளார். சிறிது நேர காத்திருப்புக்கு பின் ரயிலில் இருந்து டோராய் ஒலி எழுப்பியவுடன், யானை காட்டிற்குள் சென்றுவிடுகிறது. இதனையடுத்து ரயிலை அவர் இயக்கியுள்ளார்.

ALSO READ |  இந்தியாவை ஆட்சி செய்யும் ஆணாதிக்கம்: பெண் சமத்துவத்தை அடைய நீண்ட காலம் தேவை - சமூக ஆர்வலர்கள் கருத்து!

இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வடகிழக்கு ரயில்வே டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநரின் மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, வனப்பகுதி வழியே செல்லும் ரயில்களில் மோதி யானைகள் இறப்பது அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்க வனத்துறையும், ரயில்வேவும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், எதிர்பாராத சில சூழல்களில் விபத்தை தவிர்க்க முடிவதில்லை. தற்போது வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஷேர்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

  

  

  

இந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள ஒரு நெட்டிசன், ரயில் நிறுத்தப்பட்ட அதே இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு யானை மீது ரயில் மோதியதாக தெரிவித்துள்ளார். தற்போது அதே இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், வனப்பகுதி வழியே ரயில்கள் செல்லும்போது வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்தக் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: