காதலுக்கு இனம், மதம், நாடு, மொழி என்று எந்த தடையும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மீது காதல் வயப்பட்டு இப்பொழுது இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணமும் செய்து உள்ளார். இவர்களின் திருமணம் நெட்டிசன்கள் மத்தியில் பெரிதாக வரவேற்கப்பட்டு, வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் உள்ள குண்டூரைச் சேர்ந்தவர் மணமகன் மது ஸ்ரீகாந்த். துருக்கி நாட்டை சேர்ந்தவர்மணப்பெண் ஜிஜெம். இவர்கள் இருவரும் 2016 ஆம் ஆண்டில் முதல் முதலில் சந்தித்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு பாரம்பரிய இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
மது மற்றும் ஜிஜெம் இருவருமே ஒரே அலுவலகத்தில் ஒரே புராஜெக்ட்டில் ஒன்றாக வேலை செய்யும் போது சந்தித்துக் கொண்டனர். மது ஸ்ரீகாந்துக்கு வேலை விஷயமாக துருக்கி நாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தப் பயணம் இவருடைய வேலையை மட்டுமல்ல வாழ்க்கையே அழகாக மாற்றும் என்று அவர் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.
முதல் பார்வையிலேயே காதல் என்பது போல, நட்பும் தோன்றிவிடும். அதேபோல மது மற்றும் ஜிஜெம் இருவருமே, அலுவலகத்தில் அறிமுகமாகிய சில நாட்களிலேயே நல்ல நண்பர்களாக மாறி விட்டனர். அவர்களின் நட்பும் உடனடியாக காதலாக மாறியது. இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த அல்லது வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கும்போதே, பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
also read : தனக்கான ஜோடியை தேடும், உலகிலேயே மிக உயரமான மனிதர்...
அதே போல, வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இவர்கள் இருவரின் காதலை இரண்டு குடும்பத்தினரும் எதிர்த்து வந்தனர், திருமணத்துக்கும் சம்மதிக்கவில்லை. ஆனால், இருவரும் பொறுமையாக தங்கள் காதலை பெற்றோர்களுக்கு புரிய வைத்து, திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். பெற்றோர் ஆசியுடன் 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
also read : ரத்தன் டாடா பர்த் டே கொண்டாட்டம்! - நெட்டிசன்கள் புகழாரம்
பெற்றோர்கள் சம்மதம் முதலில் ஏற்படுத்திய தடையைத் தொடர்ந்து, கோவிட் பெருந்தொற்று இவர்களை மேலும் பிரித்து வைத்தது. 2020 ஆம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த இருவருமே, கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டால் திருமணத்தை சிறிது காலத்திற்கு தள்ளிப் போட்டனர். இந்த ஆண்டு கோவிட் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருந்த போது கடந்த ஜூன் மாதம் முதலில் துருக்கி நாட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், இப்போது பாரம்பரிய இந்து முறைப்படி, இந்தியாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் வெளிநாட்டு ஆண்கள் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்வது அவ்வபோது வைரலாக பரவும். இந்திய ஆண் அல்லது பெண்ணை காதலிப்பவர்கள் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்வது சிரமமாக இருந்தாலும், சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய பெண்ணும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆணும் இந்திய பாரம்பரிய முறைப்படி குஜராத்தில் திருமணம் செய்துகொண்டதும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.