ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நடுவானில் குடிபோதை.. கேபின் உதவியாளரின் விரலைக் கடித்த பயணி... பாதி வழியில் தரை இறங்கிய விமானம்!

நடுவானில் குடிபோதை.. கேபின் உதவியாளரின் விரலைக் கடித்த பயணி... பாதி வழியில் தரை இறங்கிய விமானம்!

குடிபோதையில் கேபின் உதவியாளரின் விரலை கடித்த பயணி

குடிபோதையில் கேபின் உதவியாளரின் விரலை கடித்த பயணி

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு ஜகார்த்தாவுக்கு வருவதற்குப் பதிலாக நடுவழியில் குலானாமு சர்வதேச விமான நிலைய மேடானில் தரையிறங்கும் நிலை ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இஸ்தான்புல்லில் இருந்து ஜகார்த்தா நோக்கிப் பயணித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், பாதிவழியில்  மேடானில் தரையிறங்கியது.

  இந்தோனேசிய பயணி ஒருவர் குடிபோதையில் கேபின் உதவியாளரின் விரலை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பயணி முஹம்மது ஜான் ஜெய்ஸ் பௌட்விஜ்ன், 48 வயதான இந்தோனேசிய நாட்டவர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் துருக்கிக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ஜகார்த்தாவுக்குத் திரும்பும் போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.

  துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தில் இஸ்தான்புல்லில் இருந்து ஜகார்த்தா நோக்கி பயணித்த இந்தோனேசிய பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியது பதிவு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கைவிலங்குகளை வைத்துக்கொண்டு விமானப் பணிப்பெண் மீது ஒரு நபர் குத்துவதை காட்டுகிறது.

  பயணி குடிபோதையில் இருந்ததாகவும், அவரை அமைதிப்படுத்த விமான பணிப்பெண் சென்றதாகவும் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னாக இதே போல் விமான பயணத்தின் போது ஒழுங்கற்ற நடத்தையாழ் எச்சரிக்கப்பவர் என்பது தெரியவந்துள்ளது.

  அதிர்ச்சியடைந்த பயணிகளும் மற்ற விமானப் பணிப்பெண்களும் விமானப் பணிப்பெண்ணுக்கு உதவ சென்றனர். மற்றொரு குழுவினர் அவரை தனது இருக்கையில் உட்கார வைக்க முயன்றார். இது நிலைமையை மேலும் மோசமாக்கி, சலசலப்புக்கு வழிவகுத்தது.

  புகைபிடிக்கும் பறவையா..! இணையத்தை அசர வைக்கும் பறவையின் வைரல் வீடியோ

  உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு ஜகார்த்தாவுக்கு வருவதற்குப் பதிலாக நடுவழியில் குலானாமு சர்வதேச விமான நிலைய மேடானில் தரையிறங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஜகார்த்தா சென்றடைந்தது.

  பயணி குலானாமு ஹெல்த் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மைதான் பகுதியில் உள்ள டெலி செர்டாங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Flight Crew, Thailand, Turkey, Viral Video