• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத திருமணம் - டெல்லி மணமக்கள் அசத்தல் முயற்சி!

சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத திருமணம் - டெல்லி மணமக்கள் அசத்தல் முயற்சி!

சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத திருமணம்

சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத திருமணம்

லட்சக்கணக்கான ரூபாய் செலவும் செய்கின்றனர். ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் ஷூட் என அதற்கே ஒரு ஒரு பெரிய தொகை செலவிடப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்றைய காலத்தில் திருமணம் என்றால் பிரமாண்டமாக தான் நடந்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவும் செய்கின்றனர். ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் ஷூட் என அதற்கே ஒரு ஒரு பெரிய தொகை செலவிடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வருடத்தில் பெரும்பாலும் எளிமையான திருமணங்களே நடைபெற்றது. எனினும் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட ஒரு சில இடங்களில் பிரமாண்ட திருமணங்களும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு தனித்துவமான திருமணத்தை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அவர்கள் தங்கள் திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்த நிலையில், சுற்றுச்சூழல் நட்பு திருமண விழாவை நடத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கான தங்கள் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தினர்.

ஆதித்யா அகர்வால் மற்றும் மாதுரி பலோடி ஆகியோர் தங்களது திருமணத்தை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் நடத்தியுள்ளனர். இந்த திருமணத்திற்கு 32 வயதான மணமகன் காருக்கு பதிலாக யூலு பைக்கில் வருகை தந்தார். திருமண மேடை, நுழைவு வாயில் அலங்கார பொருட்கள் கூட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக திருமண விழாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திருந்தனர். அதேபோல சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு திருமணத்திற்கு ஒரு சிலரே அழைக்கப்பட்டனர். தம்பதியினர் பரிமாறிக்கொண்ட மாலை கூட துளசி இலைகளால் ஆனது.

திருமணத்திற்காக அழைப்பிதழ் கூட அச்சிடப்படவில்லை, நிகழ்ச்சியை விவரிக்கும் செய்தி மட்டுமே வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டது. விழாவின் மிகவும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், அனைத்து விருந்தினர்களுக்கும் இனிப்புகளுக்கு பதிலாக தாவரங்கள் வழங்கப்பட்டன. திருமணமான தம்பதியினருக்கு உறவினர்கள் கொண்டு வந்த பரிசுகள் கூட கிப்ட் கவர் அல்லாமல் செய்தித்தாளில் தான் மூடப்பட்டிருந்தன.

பெரும்பாலும் திருமணத்தின் பட்ஜெட் சுமார் 50 லட்சம் அல்லது அதற்கு மேல் ஆகும், ஆனால் இவர்கள் திருமண விழா ரூ .2 லட்சம் செலவில் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேஷனல் ஹெரால்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த திருமணம் குறித்து பேசிய மணமகன், திருமணம் என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்கள் பற்றியது, மகிழ்ச்சிக்கு பணம் தேவையில்லை, விலையுயர்ந்த திருமணங்கள் செய்து பலரும் பணத்தை வீணடிப்பதாக கூறினார். பசுமை திருமணத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய மணமகள், நாங்கள் இருவரும் இயற்கை காதலர்கள் என்று கூறினார்.

Also read... மதுரை தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா: சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியர் அன்பழகன்!

மேலும் எங்கள் திருமணத்திற்கு புதிதாக பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த திட்டமிட்டதாகவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் குறைவாக பணம் செலவழித்து அதிக மகிழ்ச்சி அனுபவிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டோம் என தெரிவித்தார்.

இதற்கிடையில், உறவினர்கள் இதையெல்லாம் கேலி செய்வார்களா என்று இருவரும் சற்று பதட்டமாக இருப்பதாக ஆதித்யா ஒப்புக்கொண்டார், ஆனால் திருமண நாள் முடிவில், எங்கள் திட்டம் சிறப்பாக முடிந்தது, அனைவரும் எங்கள் முடிவை பாராட்டினர் என மகிழ்ச்சியுடன் கூறினார். தற்போது அதிக மாசுபாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் தேவை, என்ற நிலை உள்ள சூழலில் இது ஒரு நல்ல தொடக்கமாகும் என பலரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: