Home /News /trend /

என்னை மன்னித்துவிடுங்கள் - புதிய வீடியோவில் TTF வாசன் உருக்கம்!

என்னை மன்னித்துவிடுங்கள் - புதிய வீடியோவில் TTF வாசன் உருக்கம்!

டிடிஎஃப் வாசன் மன்னிப்பு.

டிடிஎஃப் வாசன் மன்னிப்பு.

வட இந்தியாவில் ஒருவர் இதுபோல் யூடியுபில் வளர்ந்துவந்தால் அவரை அங்கு வரவேற்பதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் ஒருவன் வளர்ந்து வந்தால் அவனது வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் எனவும் சூசகமாக டிடிஎஃப் தெரிவித்துள்ளார்.

    டிடிஎஃப் வாசன் குறித்து கடந்த சில நாட்களாக செய்தி சேனல்கள் மற்றும் சோசியல் மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் வீடியோ ஒன்றை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உருக்கமாக சில விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.

    அந்த வீடியோவில் கடந்த சில நாட்களாகப் பலர் தன்னை பற்றி எதிர்மறையாகப் பேசிவருவதாகவும், என்ன நடக்கிறது என்றே புரியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    Must Read: மெர்சல் அரசன் TTF வாசன்.. அரசியல், சினி பிரபலங்களையே பொறாமைப்பட வைத்த 2K கிட்ஸ்..!!

    மேலும் தான் யாரையும் பைக்கை வேகமாக ஓட்ட வேண்டும் என்றோ, ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்றோ கேட்டுக்கொண்டதே இல்லை எனவும், தான் செய்யும் ஸ்டண்ட் எல்லாம் தனி இடங்களில்தான் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு சில செய்தி சேனல்கள் நேர்மறையாகத் தன்னைப் பற்றித் தெரிவித்தாலும், மற்ற சேனல்கள் தன்னைப் பற்றி தவறாகச் சித்தரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு வேளை தான் யாரையாவது அதிவேகமாக பைக் ஓட்டவோ ஸ்டண்ட் செய்யவோ ஊக்கப்படுத்தியிருந்தால் தன்னை மன்னித்துவிடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

    தன்னுடைய ரசிகர்கள் பைக் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் ஸ்டண்ட் செய்தால் தனியார் இடங்களில்தான் செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தான் மணிக்கு 250கிமீ வேகத்தில் பைக்கை ஓட்டியது அந்த பைக்கில் திறனை சோதிக்கத்தானேத் தவிர வேறு எதற்காகவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் அதிவேகமாக பைக்கை செலுத்தியது தமிழ்நாட்டில் இல்லையெனவும் அது வட இந்தியாவில் உள்ள யமுனா நெடுஞ்சாலையில் எனவும் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

    வட இந்தியாவில் ஒருவர் இதுபோல் வளர்ந்துவந்தால் அவரை வரவேற்பதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் ஒருவன் வளர்ந்து வந்தால் அவனது வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் எனவும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Social media, Trending Video

    அடுத்த செய்தி