'இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க எல்லா கோட்டையும் அழிங்க'- டிரம்ப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்

'இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க எல்லா கோட்டையும் அழிங்க'- டிரம்ப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்

டிரம்ப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்

ட்விட்டரில் WON THE ELECTION! என ட்ரம்ப் பதிவிட்டதற்கு மீம்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க.. எல்லா கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்து சாப்பிடுறேன் என நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா போட்டியில் அனைத்தையும் சாப்பிட்டு விட்டு மறுபடியும் முதல்ல இருந்து தொடங்குவார். இந்த காமெடி இளைஞர்கள் மட்டும் அல்லது அனைவரது மனங்களிலும் இடம் பெற்றது.

  இதே காமெடியை வைத்து பலரும் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்பை கேலி செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போதைய அதிபர் டிரம்பின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20-ம் தேதியுடன் நிறைவுக்கு வர உள்ளது.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க டெனால்ட் டிரம்ப் மறுப்பு தெரிவித்துவந்தார்.

  இது ஒருபுறம் இருக்க ட்விட்டரில் ட்ரம்ப் WON THE ELECTION! என ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் மீம்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

   

      

      

      

      

      

      

   
  அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், ட்ரம்பை விவாகரத்து செய்ய மெலானியா ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
  Published by:Sankaravadivoo G
  First published: