Home /News /trend /

பூச்செண்டு கொடுத்து தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் யானை.. வைரல் வீடியோ!

பூச்செண்டு கொடுத்து தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் யானை.. வைரல் வீடியோ!

பூச்செண்டு கொடுத்து தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் யானை

பூச்செண்டு கொடுத்து தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் யானை

ஆண் யானையின் ப்ரோபோசலை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்ட பெண் யானை பூங்கொத்தை ஆண் யானைக்கு அருகில் கொண்டு சென்றது.

இணையம் பல வீடியோக்களால் நிரம்பியுள்ளன. அதிலும், விலங்கு காதலர்கள் பலர் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் முக்கால் வாசி வீடியோக்கள் செல்லப்பிராணிகளின் வீடியோவாக தான் இருக்கும். செல்லப்பிராணிகள் மட்டுமல்லாது வனவிலங்குகளின் வீடியோக்கள், உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் விலங்குகளின் வீடியோக்கள் என பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், ஒரு ஆண் யானை ஒன்று தனது காதலியான பெண் யானைக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. யானைகள் பார்ப்பதற்கு மிக பெரிதாக, பயங்கரமானதாக இருந்தாலும், உண்மையில் அவை செய்யும் சேட்டை குழந்தைக்கு சமமானது தான்.

ஒரு சிறிய குழந்தை போல கொஞ்சி விளையாடும் அழகு காண்போரை வியக்க வைக்கிறது. மேலும் யானைகள் மனிதர்களை போலவே சில செயல்களில் ஈடுபடுவதை காண்பது இன்னும் அழகாக இருக்கும். அதன்படி, இந்த வீடியோவில் ஆண் யானை ஒன்று ஒரு பூங்கொத்தை தனது தும்பிக்கையில் வைத்துக்கொண்டு தனது பெண் யானையை நோக்கி ஓடியது. பெண் யானையின் அருகில் சென்றவுடன் தனது துதிக்கையால் பூக்களை தனது பெண் யானைக்கு கொடுத்தது. மேலும் துதிக்கையை வளைத்து வளைத்து சைகை செய்தது. ஆண் யானையின் ப்ரோபோசலை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்ட பெண் யானை பூங்கொத்தை ஆண் யானைக்கு அருகில் கொண்டு சென்றது. பின்னர் இருயானைகளும் பூங்கொத்தை பிடித்துக் கொண்டன.




இந்த வீடியோவை எலிஃபெக்ஸோஃப்வேர்ல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பேஜ் பகிர்ந்துள்ளது. இந்த கிளிப் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பல கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. பலர் இந்த வீடியோவை ரசித்து பார்த்ததோடு, வீடியோவை மிகவும் நேசிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Also read... துணி காயப்போடும் போது மூதாட்டிக்கு நடந்த விபரீதம்...!

சமீபத்தில்கூட நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுப்ரியா சாஹூ யானைகளின் அறிவை எடுத்துக் காட்டும் சூப்பர் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் வனவிலங்குகள் வரக்கூடாது என்று தடுப்பு வேலி ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த தடுப்பு வேலியில் முதலில் ஏறி தன்னுடைய கனத்தை தாங்குமா என்று முதலில் யானை சோதிக்கிறது. பிறகு முன்னிரண்டு கால்களை வேலிக்கு அந்தப்பக்கம் வைத்து தன்னுடைய முழு எடையையும் முன்னே கொண்டு சென்றது யானை. விழுந்துவிடுமோ என்ற பயம் நமக்கு இருந்தாலும் குட்டிக் குழந்தை தத்தி தத்தி நடை பழகுவது போன்று பின்னங்கால்களை அந்த வேலியில் வைத்து தன்னை பேலன்ஸ் செய்து கீழே இறங்கி சென்றது. இந்த வீடியோ மனதை கவரும் வகையில் இருந்தது.



மிகவும் வைரலான பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக பலர் கூறினாலும், மைசூர் அருகே உள்ள நாகர்ஹோலே பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை புலிகள் காப்பக இயக்குநர் உறுதி செய்துள்ளார். விவசாய பயிர்களை தின்றுவிட்டு மீண்டும் காட்டுக்குள் வந்த போது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி