CoronaVirus : ‘எல்லோரையும் கைது செய்யுங்க’: ஊரடங்கை மீறியதால் கலெக்டர் ஆவேசம்

CoronaVirus : ‘எல்லோரையும் கைது செய்யுங்க’: ஊரடங்கை மீறியதால் கலெக்டர் ஆவேசம்

திரிபுரா

திரிபுரா மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திருமணம் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரின் இரண்டு திருமண மண்டபங்களில் ரெய்டு நடத்திய மாவட்ட ஆட்சியர், அங்கிருந்தவர்களை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.

  • Share this:
    திரிபுராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி 2 திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரின் ரெய்டு நடத்திய மாவட்ட ஆட்சியர், அங்கிருந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் தனது செயலுக்கு  மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு பத்து மணிக்கு மேல் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அகர்தலா மாவட்டத்தில் இரவு ஊரடங்கை மீறி இரண்டு திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது குறித்து தகவல் கிடைத்த திரிபுரா மேற்கு மாவட்ட ஆட்சியர் சைலேஷ்குமார், இரவு 11 மணிக்கு போலீசாரின் உதவியோடு திருமண மண்டபங்களில் அதிரடி ரெய்டி நடத்தினார்.

    மணமகன் உட்பட திருமண மண்டபத்தில் இருந்தவர்களிடம் கடுமையாக நடந்துகொண்ட அவர், அங்கிருந்தவரை உடனடியாக வெளியேற உத்தரவிட்டார். 144 தடை உத்தரவை மீறியதாக அவர்கள் அனைவரையும் கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இரண்டு திருமண மண்டபங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இதுதொடர்பாக 19 பெண்கள் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் செயல் சரியானதுதான் என்று ஒரு தரப்பினரும், அவரது செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என்று மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். 5 எம்.எல்.ஏ.க்களும் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினர்.  இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை செயலருக்கு முதலமைச்சர் பிப்லப் குமார் உத்தரவிட்டார்.

    Must Read : 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி... ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

     

    இந்நிலையில், தனது செயலுக்கு மாவட்ட ஆட்சியர் சைலேஷ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.  மக்களின் நலனுக்காகவே இவ்வாறு கடுமையாக நடந்துகொண்டதாகவும், தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக்கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: