ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் ஆழ்மனதில் உள்ள அச்சத்தை அறிய வேண்டுமா? முதலில் என்ன பார்த்தீர்கள் என்பதை சொல்லுங்கள்?

உங்கள் ஆழ்மனதில் உள்ள அச்சத்தை அறிய வேண்டுமா? முதலில் என்ன பார்த்தீர்கள் என்பதை சொல்லுங்கள்?

viral optical illusion

viral optical illusion

Optical Illusion | மனதிற்குள் மறைந்து கிடக்கும் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, பயம். எல்லா மனிதனுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நிச்சயம் பயமிருக்கும். சிலர் எனக்கு எதன் மீதும் பயம் கிடையாது என தனக்குத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உடல் நலத்தைப் போலவே மன நலமும் மிகவும் முக்கியமானது. மனம் எப்போதுமேஒரு வட்டத்திற்குள் அடங்காதது. அதீதமாக சிந்திப்பது, செயலில் செல்வாக்கு செலுத்தும் பழக்கமாக, எங்கு வேண்டுமானலும் இழுத்துச் செல்வதாக இருக்கிறது. எனவே தான் அதில் அதனுள் நமக்கே தெரியாமல் பல விஷயங்கள் மறைந்து கிடக்கின்றன. அப்படி மனதிற்குள் மறைந்து கிடக்கும் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, பயம். எல்லா மனிதனுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நிச்சயம் பயமிருக்கும். சிலர் எனக்கு எதன் மீதும் பயம் கிடையாது என தனக்குத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட நபர்களின் ஆழ்மனதில் மறைந்திருக்கும் அச்சத்தை வெளிப்படுத்த உதவும் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம். ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை வெறும் ஓவியங்கள் அல்லது புகைப்படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டறியும் புதிர் விளையாட்டு மட்டும் கிடையாது. அது ஒருவரது தனிப்பட்ட குணநலன்கள், காதல் உறவு, சிந்தனை, திறமை, ஆளுமை போன்றவற்றை கண்டறியும் பர்சனாலிட்டி பரிசோதனையாகவும் நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தில் நீங்கள் முதலில் எதை பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் ஆழ்மனதில் ஒருக்கும் அச்சத்தை கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் இது நீங்கள் முதலில் பார்ப்பதன் அடிப்படையில் உங்கள் ஆழ் மனதில் பயத்தை வெளிப்படுத்தும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். படத்தில் நீங்கள் முதலில் பார்க்கும் உருவம் உங்கள் ஆழ் மன அச்சத்தை வெளிப்படுத்தும். இந்த படம் உங்கள் ஆழ் மனதில் உள்ள பயத்துடன் உருவங்களை இணைக்க தூண்டுகிறது.

தி மைண்ட்ஸ் ஜர்னலின் படி, படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் மிகப்பெரிய பயத்தைப் பற்றி எங்களிடம் எடுத்துக்காட்டுகிறது. அதாவது குழந்தைகளின் மனதைக் குறிக்கக்கூடிய பல வகையான நிகழ்வுகள் இந்த ஓவியத்தில் மறைந்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் முதலில் என்ன பார்த்தீர்கள்? நீங்கள் ஒரு சிறுமி, ஒரு பட்டாம்பூச்சி மற்றும் ஒரு ஸ்ட்ராபெரியைக் கண்டுபிடித்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

உங்கள் கண்ணுக்கு முதலில் தென்பட்டது சிறுமியாக இருந்தால்:

ஒரு மரத்தின் கீழ் ஒரு சிறுமி அமர்ந்திருப்பதை நீங்கள் முதலில் பார்த்திருந்தால், குழந்தை பருவத்தில் இருந்தே அடக்கப்பட்ட உணர்ச்சிகள் மீது அதீத பயம் கொண்டுள்ளீர்கள் என அர்த்தம். உணர்ச்சிகள் எப்போதும் உறவை அடிப்படையாக கொண்டது. அம்மாவுடனான குழந்தையின் உறவு முக்கியமானது. குழந்தையின் மனதைப் பாதிக்கக்கூடிய பல்வேறு வகையான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.

நீங்கள் உங்கள் அம்மாவுடன் சிறிது நேரம் செலவழித்து, பாசத்துடன் பழகினால் அது உங்கள் அச்சத்தைத் குறைக்க உதவலாம்.

Read More : எளிதில் முடியாத சவால்... பீர் பாட்டில்களுக்கு நடுவில் இருக்கும் கோப்பையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

முதலில் பார்த்தது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்தால்:

நீங்கள் முதலில் ஒரு பட்டாம்பூச்சியைக் பார்த்திருந்தால், மரணம் அல்லது வாழ்க்கையின் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பது உங்கள் மிகப்பெரிய பயம் என்று அர்த்தம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, பட்டாம்பூச்சி பாரம்பரியமாக நேர்மறையான விஷயங்களுடன் தொடர்புடையது. ஆனால் இதிலும் இரண்டு பாகஙக்ள் உள்ளன ஒன்று நேர்மறையாக இருந்தால், மற்றொன்று இருண்ட பக்கமாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கும்.

உங்கள் கனவில் பட்டாம்பூச்சிகள் தோன்றினால், அது மாற்றத்தையும் தொடக்கத்தையும் குறிக்கிறது.

ஜர்னலின் படி, "இந்த பட்டாம்பூச்சியின் ஆன்மீக அர்த்தம் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் ஆன்மாக்களை அனுப்புவதாகும்."அதாவது பட்டாம்பூச்சி இறந்தவர்களை அவர்களது உலகத்திற்கு அழைத்துச் செல்வதை குறிக்கிறது. பட்டாம்பூச்சி சின்னத்தின் பாசிட்டிவான பக்கம் என்னவென்றால், அது அன்பின் மீது உங்களுக்கு இருக்கும் ஒரு எதிர்பார்ப்பையும் குறிக்கிறது.

நீங்கள் முதலில் ஒரு ஸ்ட்ராபெர்ரியைப் பார்த்திருந்தால்:

ஓவியத்தை பார்த்த முதல் பார்வையிலேயே உங்கள் கண்ணில் பட்டது ஸ்ட்ராபெர்ரி தான் என்றால், அது இதயத்தைக் குறிக்கும். ஸ்ட்ராபெர்ரி எப்போதும் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது அன்பின் வலியில் இருந்து உற்பத்தியாகும் கனி என நம்பப்படுகிறது. புராண கதைகளின் படி, அடோனிஸின் மரணத்திற்குப் பிறகு வீனஸ் தேவை வடித்த ஒவ்வொரு துளி கண்ணீரும் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழங்களை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது.

First published:

Tags: Entertainment, Optical Illusion, Trending Videos, Viral