ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உண்மையில் இருப்பது என்ன.! முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்

உண்மையில் இருப்பது என்ன.! முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | இன்டர்நெட்டில் நெட்டிசன்களை கவரும் பலவும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. கண்களையும், மூளையையும் குழப்பும் பல ஆப்டிகல் இல்யூஷன்கள் சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் வரவேற்பை பெற்று வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உண்மையில் ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை பல வகையானவை. முதல் முதலில் பார்ப்பது ஒன்று உள்ளே மறைந்திருப்பது ஒன்று, பார்த்தாலும் கண்களுக்கு எளிதில் புலப்படாதவை, சில ஆப்டிகல் இல்யூஷன்கள் நம்மை முட்டாள் ஆக்குபவை. கண்களை ஏமாற்றுபவை மற்றும் மூளையை குழப்புபவை என வகை வகையான ஆப்டிகல் இல்யூஷன்கள் இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் டிக்டாக் உள்ளிட்ட பிரபல சோஷியல் மீடியாக்களில் மனதை குழப்பும் மற்றும் நம் கண்களை ஏமாற்றி முட்டாள் ஆக்கும் வகையிலான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வைரலாகி வரும் ஆப்டிகல் இல்யூஷனை கீழே பாருங்கள்.

பார்த்து விட்டீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் கிட்டத்தட்ட அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலே உள்ள ஆப்டிகல் இல்யூஷனை பார்த்தவுடன் கிட்டத்தட்ட நம் அனைவர்க்கும் தோன்றும் ஒரே விஷயம் இது தான். இது கடலில் தண்ணீரை கிழித்து சீறி பாய்ந்து செல்லும் ஒரு பாய்மர கப்பலின் ஏரியல் ஷாட் (வான்வழி ஷாட்) என்று தான் நீங்கள் உறுதியாக நம்புவீர்கள்.

Read More : இந்த படத்தில் ஒளிந்துள்ள பக்கெட்டை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.? முயற்சி செய்து பாருங்க!

ஏனென்றால் இந்த போட்டோவில் உள்ள அந்த அலை அலையான தோற்றம் மற்றும் வெள்ளை புள்ளிகள் கொண்ட தோற்றம் உள்ளிட்டவை நம் கண்களுக்கு கடல் அலை போல காட்சி அளிக்கிறது. போட்டோவிற்கு நடுவே உள்ள அந்த பொருள் கடல் அலையை கிழித்து கொண்டு செல்லும் கப்பலின் சேட்டிலைட் வியூ போலவே இருப்பதால் நீங்கள் இப்படி நினைப்பதில் ஆச்சரியமில்லை தான்.

ஆனால், உண்மை நீங்கள் நினைப்பதற்கு வெகு வெகு தூரத்தில் இருக்கிறது. இந்தப் படம் நீங்கள் நினைப்பது போல் பாய்மர கப்பலின் ஏரியல் ஷாட் இல்லை என்பதை TikToker Pasillusion அவரது ஃபாலோயர்ஸிற்கு வெளிப்படுத்தினார். அப்படியானால் இது கப்பலின் போட்டோ இல்லையா என்று கேட்டடால் ஆம், இல்லை என்பது தான் பதில். உண்மையில் இந்த போட்டோவில் இருப்பது என்னவென்று தெரிந்தால் நீங்கள் சற்று கடுப்பாகி தான் போவீர்கள். கடலின் குறுக்கே ஓடும் கப்பலின் ஏரியல் ஷாட் வியூ இல்லை என்றால் பின்ன என்ன தான் இது என்ற கேள்விக்கு மிக சிம்பிளான பதில் "இந்த போட்டோவில் இருப்பது படத்தில் லெதர் சோஃபாவின் துணி இரண்டாக பிரிந்துள்ளது" என்பது தான். இதை படித்த பிறகு இப்போது இந்த ஆப்டிகல் இல்யூஷனை உற்று பாருங்கள். உங்களை கண்களுக்கும் இப்போது லெதர் சோஃபா புலப்படுமே.. சரி, சரி கடைசியில் தான் உண்மையை சொல்லி விட்டோமே..

ஒரு சாதாரண லெதர் சோஃபாவின் போட்டோவை வைத்து ஒரு ஆப்டிகல் இல்யூஷனா..! என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் ஒரு படத்தின் ஒளி விளைவுகள் மற்றும் சீரமைப்பு அதை முற்றிலும் வேறுபட்டதாக நம் கண்களுக்கு காட்டும் என்பது இந்த சிம்பிளான போட்டோ மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral