ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அந்த சிரிப்பு தான் ஹைலெட்.. வெட்கத்தால் இணையத்தை கொள்ளை கொண்ட வசந்தி - வைரல் வீடியோ

அந்த சிரிப்பு தான் ஹைலெட்.. வெட்கத்தால் இணையத்தை கொள்ளை கொண்ட வசந்தி - வைரல் வீடியோ

வெட்கத்தால் இணையத்தை கொள்ளை கொண்ட வசந்தி

வெட்கத்தால் இணையத்தை கொள்ளை கொண்ட வசந்தி

Viral Video | சுங்கசாவடி ஒன்றில் சில்லறை விற்பனையில் செய்து வந்த பெண் ஒருவர்  தனது சிரிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டு உள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருவததை நாம் பார்க்க முடியும். தற்போது டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு இருக்கும் வீடியோக்களை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் மிஸ் செய்யமாட்டார்கள். சில வீடியோக்கள் மனதை காயப்படுத்துவது போல் இருக்கும், சில விளையாட்டு தனமாக இருக்கும், மற்றவை குறும்புதனமாக இருக்கும். ஆனால் பார்த்த உடன் நம்மை மறந்து ரசிக்கும்படியாக சில வீடியோக்கள் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

  நாம் சொந்த ஊருக்கு பஸ்ஸில் போகும் போது டோல் மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்களில் பஸ் நின்று செல்லும். அப்போது அந்த சில வினாடிகளில் பேருந்துக்குள் சிலர் ஏறி மாங்கா, வெள்ளரிகிழங்கு, பனைகிழங்கு, கடலை என்று கூவி கூவி விற்பார்கள். நம்மில் அதை பலர் விரும்பி வாங்கி சுவைத்து இருப்போம். ஆனால் அந்த சில வினாடிகள் மட்டுமே வந்து செல்வோரின் முகம் யாருக்கும் ஞாபக இருக்க வாய்ப்பில்லை. பரபரப்பாக ஏறி இறங்கி வேலை பார்க்கும் அவர்களின் முகத்தில் புன்னகை என்பது கேள்விகுறியாகவே இருக்கும்.

  ஆனால்  சுங்கசாவடி ஒன்றில் சில்லறை விற்பனையில் செய்து வந்த பெண் ஒருவர்  தனது சிரிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டு உள்ளார். தாரப்புரம் புகைப்பட காதலன் மஹி என்னும் ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வையை வீடியோ கடந்த பலரது லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது.

  அந்த வீடியோ பதிவில் , வசந்தி தன்னோட வெட்கத்தை அழகா வெளிக்காட்டுனாங்க. உளுந்துர்பேட்டை டோல்கேட்டில் நான் கண்ட தேவதை, படிக்கும் பொழுது வேலை செய்து பழகி படிப்பை தொடர்வது எவ்வளவு பெரிய விஷயம் அதுவும் விடியற்காலை 4 மணிக்கு சிரிக்க வச்சு அழகு பார்க்கிற சந்தோசம் வேற மாதிரி என்று  பதிவிடப்பட்டுள்ளது.

  மேலும் வீடியோவில் அந்த பெண் தான் வடலூரில் உள்ள கல்லூரியில் படிப்பதாக கூறுகிறார். உங்க சிரிப்பு நல்லா இருக்கு என்று சொன்னவுடன் மீண்டும் வெட்கத்துடன் அவர் சிரித்து போலியில்லாத புன்னகையை அனைவருக்கும் பரிசாக கொடுத்து இணையத்தை கொள்ளை கொண்டுள்ளார்.

  இந்த வீடியோவை பார்த்த ஒருவர், தானே உழைத்து தன் சொந்த முயற்சியில் படித்து முன்னேற நினைக்கும் சகோதரி வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் என்றுள்ளார். மற்றொருவர் இந்த அழகு தேவதையின் அன்பு புன்னகைக்கு அந்த இறைவனே தலை வணங்குவான்.உன் உழைப்பிற்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள் என்றுள்ளார். இதுப்போன்று பலரது அன்பையும் வாழ்த்தையும் பெற்றுள்ளார் வசந்தி.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trending Video, Viral Video