ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Trending Today YouTube : "நண்பர்களே ரொம்ப சந்தோசமா இருக்கு என்னாச்சினா பரிதாபங்கள் வீடியோ போட்ருக்காங்க" - யூடியூப் ட்ரெண்டிங்

Trending Today YouTube : "நண்பர்களே ரொம்ப சந்தோசமா இருக்கு என்னாச்சினா பரிதாபங்கள் வீடியோ போட்ருக்காங்க" - யூடியூப் ட்ரெண்டிங்

 யூடியூப் ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் அழகிய லாக்டவுன், பரிதாபங்கள் வீடியோ,பாக்கியலட்சுமி ப்ரோமோ, முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல், வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் அதிக பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகியுள்ள வீடியோ கோபி, சுதாகர் செய்த அல்டிமேட் காமெடி. லாக்டவுன் பாவங்கள் என வெளியிட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 1,547,817 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  தினமும் போடலன்னா சீரியல் தா பாக்கணும் தலைவா, நண்பர்களே ரொம்ப சந்தோசமா இருக்கு என்னாச்சின பரிதாபங்கள் வீடியோ போட்டுரூக்காங்க எனவும் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் அகிகம் குவிந்து வருகின்றது.

  ' isDesktop="true" id="485313" youtubeid="lop7rGDHMsw" category="trend">

  யூடியூப் ட்ரெண்டிங்கில் இன்றைய தினம் 5ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது ரவுடி பேபி சேனலில் அழகிய லாக்டவுன் வீடியோ. வீட்டில் குழந்தைக்கும்,பெற்றோருக்கும் இடையே நடக்கும் அழகிய தருணங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காணொளிக்கு 907 பேர் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

  ' isDesktop="true" id="485313" youtubeid="HsJ5tz2rtSU" category="trend">

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி ப்ரோமோ வீடியோ. விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் பாக்யலட்சுமி. இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.இந்த தொடரை 'டேவிட்' என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள். இதன் ப்ரோமோ வீடியோ இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் 18ம் இடத்தில் உள்ளது.

  ' isDesktop="true" id="485313" youtubeid="AwYHfyVMvB0" category="trend">

  ட்ரெண்டிங்கில் 26வது இடத்தில் இடம் பிடித்துள்ள வீடியோ கீர்த்தி என பெயர் கொண்ட யூடியூப் சேனல் வீடியோ. தலைமுடியை படாத பாடு படுத்தும் இவரது வீடியோவை காண இலங்கையில் கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. நாடு முழுவதும் ரசிக கிளைகளை கொண்டுள்ள இவர் தற்போது திருமணத்தில் தனது தலைமுடியை எப்படி அலங்கரித்தனர் என டெமோ ஒன்றை காட்டுகின்றார். இந்த வீடியோ இதுவரை 543,070 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  ' isDesktop="true" id="485313" youtubeid="8zNCP_UE6pY" category="trend">

  அடுத்தத்ததாக டிக்கெட் கிடைக்குமா என தலைப்பிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 640,022 பார்வலர்களை பெற்றுள்ள இந்த வீடியோவை திருமண தம்பதிகள் வெளியிட்டுள்ளனர். பலரும் இந்த வீடியோவின் கீழே வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  ' isDesktop="true" id="485313" youtubeid="wM5zOCVkty0" category="trend">

  அடுத்த படியாக 1ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளதுமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல்.

  ' isDesktop="true" id="485313" youtubeid="6Z-rd1Sx17E" category="trend">

  நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் லிரிக் பாடலை ஷிவாங்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாம் விஷால் பாடியுள்ளனர். இந்த பாடல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் 1ம் இடம் பிடித்துள்ளது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Youtube