ஆடை முதல் ஹனிமூன் வரை.. திருமணத்திற்கான பீட்சா பேக்கேஜ்!

இந்த பேக்கேஜில் பூங்கொத்து , ஹனிமூன் பேக்கேஜ் அதோடு செலவு செய்ய 45,000 ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது.

news18
Updated: July 24, 2019, 6:26 PM IST
ஆடை முதல் ஹனிமூன் வரை.. திருமணத்திற்கான பீட்சா பேக்கேஜ்!
’பீட்சா பிரைடல் பேக்கேஜ்’
news18
Updated: July 24, 2019, 6:26 PM IST
ருசிக்காகப் பீட்சாவை அவ்வபோது சாப்பிடும் அளவிற்குத்தான் இந்தியர்களுக்கு பீட்சா மீதான பற்று. ஆனால் வெளிநாட்டினருக்கு பீட்சா மீது தீராத கிரேஸ். அதனால்தான் இந்த கான்சப்ட் வெளிநாடுகளில் பிரபலாமாகி வருகிறது.

அதாவது சிகாகோவைச் சேர்ந்த ’சிகாகோ டவுன் பீட்சா’ நிறுவனம் ’பீட்சா பிரைடல் பேக்கேஜ்’ (Pizza Bridal Package) என உலக அளவில் முதல் முறையாக இப்படியொரு யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த நிறுவனம் திருமணமாகப்போகும் ஜோடிகளைப் பங்கேற்கச் செய்து அதில் வெற்றி பெரும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது. அதன் தீம் முற்றிலும் பீட்சாதான். திருமணப்பெண் அணியும் ஆடை , கேக் , உணவு என எல்லாமே பீட்சாதான். இதை அறிவித்த நொடியில், பீட்சா மீது  காதல் கொண்டோர் பலரும் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற முதல் ஜோடிக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது.
அதில் திருமணப் பெண்ணின் ஆடை முற்றிலும் பீட்சா தோற்றத்தில் பெப்பரோனி ( pepperoni) ஃப்ளேவரில் வடிவமைத்துள்ளது. வெட்டிங் கேக்காக மூன்று அடுக்கு பீட்சா கேக் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் வரும் உறவினர்களுக்கும் திருமண விருந்து பீட்சாதான். அந்த திருமண அறையும் முற்றிலும் பீட்சா தீமில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமன்றி திருமணமான ஜோடிக்கு பீட்சாவில் பூங்கொத்து , ஹனிமூன் பேக்கேஜ் அதோடு செலவு செய்ய 45,000 ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது. சிகாகோ அல்லாது மற்ற மாநிலங்கள் , மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹனிமூனை சிகாகோவில் கழிக்க ஏற்பாடு செய்து தரப்படுகிறது.Loading...

பீட்சா தோற்றத்தில் ஆடை என்கிற யோசனை; லண்டனைச் சேர்ந்த பாடகி ரிஹனாவின் மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மஞ்சள் நிற கவுன் அணிந்துவந்தார். அதன் தரை தொடும் டிசைன் பீட்சா வட்டம் போல் உள்ளது என்று நெட்டிசன்களால் மீம்ஸ் பரப்பப்பட்டது. அந்த மீம்ஸ்தான் அவர்களுக்கு இந்த யோசனையை உதிக்கச் செய்தது என்று இதன் மேலாளர் ரேச்சல் கூறியுள்ளார்.

தற்போது இந்த பிரைடல் பீட்சா பேக்கேஜ்  வெளிநாட்டினரிடையே பிரபலமாகி வருகிறது. பலரும் முந்திக் கொண்டு இந்த ஜோடி போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...