டான்னா சுல்தானா மற்றும் எஸ்டெபன் லாண்ட்ராவ் தம்பதிகளுக்குக் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது. ஆரோக்கியமாகக் குழந்தை பெற்ற கணவரும் அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மனைவியும் அவ்வப்போது தங்களது சமூக வலைத்தளத்தில் இது குறித்துப் பகிர்ந்து வருகின்றனர்.
தென் அமெரிக்கா கண்டத்தில் கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் டான்னா சுல்தானா . இவர் மாடலாக பணியாற்றி வருகிறார். இவர் பிறப்பில் ஆணாகப் பிறந்தவர். பின்னர் பெண்ணாக மாறியுள்ளார். இவரின் கணவர் அதே போல் பிறப்பில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்கின்றனர். இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். அதே போல் ஒரு வருடம் முன்னாள் டான்னா சுல்தானா கணவர் கர்ப்பமானார்.
தனது கணவர் கற்பமானதைப் மனைவி புகைப்படங்களுடன் இணையத்தில் பதிவிட்டு அவர்கள் இருவரின் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினார். இந்த நிலையில் ஆரோக்கியமான அழகான ஆண் குழந்தை இவர்களுக்குப் பிறந்துள்ளது. இந்த சம்பவம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதற்கு வாய்ப்புள்ளதா என்று குழம்பிய மக்களுக்கு இதோ மருத்துவர்கள் அளித்த பதில்.
டான்னா சுல்தானா பிறப்பில் ஆண் என்ற காரணத்தினால் அவரால் கர்ப்பம் தரிக்க முடியாது. ஆனால் எஸ்டெபன் லாண்ட்ராவ் பிறப்பில் பெண் என்பதால் அவருக்குக் கர்ப்பம் தரிக்க ஏதுவான உடல் அமைப்பு உள்ளது. அதனை அவர் ஆணாக மாறும் போது நீக்கவில்லை என்பதால் அவரால் இயற்கையான முறையில் குழந்தையைப் பெற்று எடுக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்கள், குழந்தைக்கு ஒரு வயது மேல் ஆன நிலையில் இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக உள்ளப் புகைப்படங்கள் மூலம் பார்த்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boy baby, Transgender