தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை ரயில் மோதி உருக்குலைந்த சோக நிகழ்வு

news18
Updated: September 28, 2019, 12:33 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை ரயில் மோதி உருக்குலைந்த சோக நிகழ்வு
விபத்து நடந்த காட்சிகள்
news18
Updated: September 28, 2019, 12:33 PM IST
தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி யானை உருக்குலைந்து, நடக்க முடியாமல் இருக்கும் வீடியோ, அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் நேற்று காலை, சிலிகுரி - துப்ரி இடையே ஓடும் இண்டெர்சிட்டி ரயில் மோதி, யானை படுகாயமடைந்தது.

காலை 8.10 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் பயங்கரமாக மோதியதில் 30 மீட்டர் தொலைவுக்கு யானை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தில், யானை படுகாயமடைந்தது. ரயிலின் எஞ்சின் பகுதியும் பலத்த சேதமடைந்தது.


உடம்பெல்லாம், சிராய்ப்பு காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட, தவழ்ந்து சென்று பின், ஒரு மரத்தின் அருகே எழுந்து நிற்கிறது அந்த யானை. இந்த காட்சியை ரயில் பயணிகள் தங்களது போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள், பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது. கம்பீரமாக காட்டில் வலம் வரும் யானையா? இப்படி என்று பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், 2015-16 ஆண்டில் அப்பகுதியில் 25 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு விபத்து குறைந்ததால், ரயில் வேகத்தை 50 கிமீ ஆக அதிகரிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு, தற்போது வரை 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் அங்கு இயக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். உள்காயம் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.Also See...

First published: September 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...