பாரம்பரிய ஜப்பானிய காலை உணவு ‘நாட்டோ’ கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுகிறது – ஆய்வின் தகவல்

மாதிரி படம்

ஜப்பானில் காலை உணவாக வழங்கப்படும் நொதி (ஃபெர்மென்ட்) செய்யப்பட்ட பாரம்பரிய சோயா பீன் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு ஒன்று, SARS-CoV 2 வைரஸுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 • Share this:
  கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாரம்பரிய ஜப்பானிய காலை உணவு ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் முடிவுகள் அற்புதமாக இருந்தாலும், கூடுதல் ஆய்வு தேவை என்று கூறப்படுகிறது.

  ஜப்பானில் காலை உணவாக வழங்கப்படும் நொதி (ஃபெர்மென்ட்) செய்யப்பட்ட பாரம்பரிய சோயா பீன் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு ஒன்று, SARS-CoV 2 வைரஸுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாட்டோ என்று கூறப்படும் அந்த உணவு, பாஸ்சிலஸ் சப்டிலிஸ் உடன் ஃபெர்மென்ட் செய்யப்பட்ட சோயா பீன்ஸ் பயன்படுத்தி சமைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியா, தாவரங்களில் மற்றும் மண்ணில் காணப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டோக்கியோ விவசாய மற்றும் தொழில்நுட்ப பல்கழைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஒட்டிக்கொள்ளும் பிசிபிசுப்புத் தன்மையுடன், வலுவான வாசனையுடன் காணப்படும் இந்த நாட்டோ, SARS-CoV 2 செல்களில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் திறன் கொண்டதாகக் காணப்படுகிறது என்று கூறினார்கள்.

  பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் ஆய்வு நிலையத்தின் இயக்குனர், டெட்சுயா மிசுடானி கூறியதாவது, “பல காலமாக, நாட்டோ ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்பதை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள்.” என்று கூறினார். “சமீபத்திய ஆண்டுகளில், இதை உறுதி படுத்தும் வகையில், அறிவியல் ஆய்வாளர்களின் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில், கோவிட்-19 தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் SARS-CoV 2 மற்றும் கால்நடைகளில் சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் போவின் ஹெர்ப்பஸ் வைரஸ் 1 (BHV-1) மீது நாட்டோவின் ஆன்டி-வைரல் விளைவுகளை பரிசோதனை செய்தது.

  ஆய்வின் கண்டுபிடிப்புகளை, பயோகெமிக்கல் மற்றும் பயோஃபிசிக்கல் ரிசர்ச் கம்யூனிகேஷன்ஸ் ஜர்னல் வெளியிட்டது. ஆய்வுக்குழு, நாட்டோவின் இரண்டு விதமான எக்ஸ்ட்ராக்ட்களைப் பயன்படுத்தியது, வெப்பத்துடன், வெப்பமில்லாதது. இந்த எக்ஸ்ட்ராக்ட்களை, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கால்நடை மற்றும் மனிதர்கள் செல்களில் பரிசோதனை செய்யப்பட்டது. இதிலே, ஒரு செட், SARS-CoV 2 ஆல் பாதிக்கப்பட்டது, மற்றொன்று BHV-1 ஆல் பாதிக்கபப்ட்டது. வெப்பமில்லாமல் பிரித்தெடுக்கப்பட்ட நாட்டோ எக்ஸ்ட்ராக்ட் உடன் பரிசோதனை செய்யப்பட்ட போது, இரண்டு வைரசுமே, செல்களை ஊடுருவி பாதிக்கும் திறனை இழந்தது. இருந்தாலும், வெப்ப எக்ஸ்ட்ராக்ட்டால் இரண்டு வைரஸ்களுமே பாதிக்கப்படவில்லை.

  Also read... உலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ரூ. 60 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  “புரோட்டீஸ் அல்லது புரோட்டீஸஸ் – புரதங்களை மெட்டாபலைஸ் செய்யும் பிற புரதங்கள் - நாட்டோ எக்ஸ்ட்ராக்ட்டில், SARS-CoV-2 இன் ஸ்பைக் புரத ரிசப்ட்டார் பிணைப்பு களத்தை நேரடியாக செரிமானம் செய்கிறது" என்று மிசுடானி கூறினார், வெப்பத்தில் புரோட்டீஸ், புரதங்களை செரிமானம் செய்யும் திறனை இழந்து, வைரஸ் தொற்று நோய் பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கிறது.

  இந்த ஸ்பைக் புரதம், வைரஸின் மேற்பகுதியில் அமர்ந்து, ஹோஸ்ட் செல்களில் ஒரு ரிசப்ட்டார் உடன் பிணைகிறது. செயல்படாத ஸ்பைக் புரதம் உடன், SARS-CoV-2 ஆரோக்கியமான செல்களை பாதிக்க முடியாது. இதே போன்ற விளைவுகளை, BHV-1 மற்றும் ஆல்ஃபா கோவிட் வேரியன்ட்டிலும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறினார்கள். இந்த ஆய்வு முடிவு நம்பிக்கையூட்டுவதாக காணப்பட்டாலும், இதன் துல்லியான மாலிகுலார் மெக்கானிசம் பற்றி அறிய வேண்டும் என்று மிசுடானி தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: