ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாரம்பரிய முறையில் IT அலுவலகம்.. அசத்தும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

பாரம்பரிய முறையில் IT அலுவலகம்.. அசத்தும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

காட்சி படம்

காட்சி படம்

டிவிட்டரில் புதிய அலுவலகம் குறித்த புகைப்படங்களுடன் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்றால் வானளாவிய கட்டடங்களும், பளபளக்கும் சாலைகள் மற்றும் விமான நிலையத்தை கொண்ட மாநகரங்களில் தான் இயங்கும் என்ற பொது கண்ணோட்டத்தை ஏற்கனவே மாற்றி அமைத்தவர் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு.

இவரது நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது என்றாலும், தென்காசி அருகே உள்ள கிராமத்தில் தனக்கான அலுவலகத்தை அமைத்து, அங்கு சில பொறியாளர்களுடன் பணி செய்து வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. உலகெங்கிலும் பல கிளைகள், எண்ணற்ற பணியாளர்கள் ஜோஹோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், கிராமத்தில் இருந்து பணிபுரிவதையும், கிராம மக்களுக்கு சமூகத் தொண்டுகள் செய்வதையும் தன் வாழ்க்கையின் மாபெரும் அத்தியாயமாக மாற்றிக் கொண்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இத்தகைய சூழலில், முழுக்க, முழுக்க இயற்கையாக பொருட்களைக் கொண்டு வடிவமைத்துள்ளார் அவர். இதுகுறித்த தகவலை டிவிட்டர் மூலமாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ளார். எனினும், புதிய அலுவலகம் எங்கு அமைந்துள்ளது என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

also read : பெட்டி, பெட்டியாய் எலுமிச்சை பழம்.. புதுமண தம்பதிக்கு கிடைத்த வித்தியாசமான கிப்ட்..

 களிமண், பனை ஓலை…

டிவிட்டரில் புதிய அலுவலகம் குறித்த புகைப்படங்களுடன் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், “புதிய கான்ஃபரன்ஸ் அறை மற்றும் சிறிய அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை களி மண், வைக்கோல் மற்றும் சுண்ணாம்ப்புக் கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை ஆகும்.

மாடியில் உள்ள மேற்கூரை பனை ஓலைகளால் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் நாளிலும் கூட சௌகரியமாக இருக்கிறது. நான் இதை பெரிதும் விரும்புகிறேன். எனக்கான அலுவலகமாக இதை மாற்றிக் கொண்டு விட்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறத்தில் அமைந்த 30ஆவது அலுவலகம்:

கிராமப்புற இளைஞர்கள், சிறு நகரத்தின் இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் அருகாமையில் அலுவலகம் அமைத்து வேலைவாய்ப்பு வழங்குவதை இலக்காகக் கொண்டு ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊர் திரும்பிய இளைஞர்களை அவர்களது சொந்த ஊருக்கு அருகாமையில் பணி செய்ய வைக்கும் புதுமையான திட்டத்தை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த கிராமப்புற பகுதி அல்லது பின்தங்கிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 30ஆவது அலுவலகம் இதுவாகும்.

also read : உங்கள் பழைய ஆண்டிராய்டு ஃபோனில் உள்ள அனைத்து விவரங்களையும் எளிய முறையில் எப்படி அழிப்பது?

தென்னை மர பண்ணையில் அலுவலகம்:

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பகுதியில் தென்னை மர தோப்புக்கு நடுவே பசுமை குடில்கள் அமைத்து ஜோஹோ நிறுவனத்தின் 15 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்தும் அவர் டிவிட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.

கிராமப்புறங்களில் அலுவலகம் அமைக்கும்போது தொழில்நுட்ப ரீதியாக இடமாற்றத்திற்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்றும், அதற்கு உறுதுணையாக உள்ள ஜோஹோ நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைமைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு கூறியிருந்தார்.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் பெரிய மாநகரங்களுக்கு சென்று பணிபுரிவதை விரும்பவில்லை. வீட்டில் இருந்து அல்லது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஊரில் இருந்து பணி செய்வதையே விரும்புகின்றனர். அத்தகையவர்களின் கனவுகளை நனவாக்கும் பணியை ஜோஹோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

First published:

Tags: Zoho