முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஷோரூம் உள்ளே நுழைந்த ஆளில்லாத டிராக்டர்.. கண்ணாடியை உடைத்து சேதம்..அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஷோரூம் உள்ளே நுழைந்த ஆளில்லாத டிராக்டர்.. கண்ணாடியை உடைத்து சேதம்..அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

உத்தரப்பிரதேசத்தில் கண்ணாடியை உடைத்து ஷூ ஷோரூம்குள் ஆளில்லாத டிராக்டர் நுழைந்துள்ளது. இதனின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப்பிரதேசத்தில் பிஜ்னோர் காவல் நிலையம் எதிரில் உள்ள ஷூ ஷோரூம்குள் உள்ளே ஆளில்லாத டிராக்டர் ஒன்று நுழைந்துள்ளது. ஷோரூமின் வெளிப்புறத்தில் இருந்து ஆளில்லாத டிராக்டர் கண்ணாடிக் கதவுகள் மேல் மோதியுள்ளது. கடையின் ஊழியர்கள் வெளியில் சென்று டிராக்டரை நிறுத்த முயன்ற நிலையில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு டிராக்டர் ஷோரூம்குள் நுழைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஷோரூமின் எதிரில் நிற்க வைக்கப்பட்டிருந்த இருந்த டிராக்டர் தானாக ஸ்டார்ட் ஆகி கடைக்குள் நுழைந்தாக கூறப்படுகிறது. காவல்நிலையத்திற்கு வந்திருந்த கிசான் குமார் என்பவர் அவரின் டிராக்டரை ஹோரூம் எதிரில் நிற்கவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த டிராக்டர் சில மணி நேரங்களில் தனாக ஸ்டார்ட் உள்ளது. மேலும் ஷோரூமின் எதிரில் இந்த சில இருசக்கர வாகனங்களும் இதனால் சேதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஓடிக்கொண்டு இருந்த டிராக்டரை கடையில் ஊழியர் ஒருவர் நிறுத்திய நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிஜ்னோர் கோட்வாலி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

First published:

Tags: Uttar pradesh, Viral Video