Home /News /trend /

ஆன்லைனில் ரூம் புக் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... புதிய வகை மோசடியால் சுற்றுலா பயணிகள் அவதி

ஆன்லைனில் ரூம் புக் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... புதிய வகை மோசடியால் சுற்றுலா பயணிகள் அவதி

booking.com வலைதளம் மூலம் அவரது வீட்டை முன்பதிவு செய்திருப்பதாக சுற்றுலாவாசிகள் கூறினர்.

booking.com வலைதளம் மூலம் அவரது வீட்டை முன்பதிவு செய்திருப்பதாக சுற்றுலாவாசிகள் கூறினர்.

வீட்டின் உரிமையாளர் தாங்கள் அந்த வீட்டை booking.com இல் பட்டியலிடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். வீட்டு உரிமையாளர், இதைப் பற்றி புகாரும் அளித்திருந்தார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பயணிகள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு என்று, பல வலைத்தளங்கள் தங்கும் விடுதிகள், ஹோட்டல், ரெசார்ட் என்று தங்குவதற்கான முன்பதிவு சேவையை வழங்கி வருகின்றன. தங்கும் விடுதிக்கான உரிமையாளர்களும், இத்தகைய சேவை வழங்கும் நிறுவனத்திடம் தங்கள் வீடு, அல்லது ரெசார்ட் அல்லது வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு உள்ளது, டூரிஸ்டுகள் தங்கிக் கொள்ள என்று பதிவு செய்வார்கள்.

  ஆனால், booking.com என்ற பிரபலமான டிராவல் & டூரிசம் சார்ந்த சேவை வழங்கும் நிறுவனம், வடக்கு லண்டனில் லிஸ்டிங் செய்யப்படாத ஒரு பிரைவேட் ஹோமை தங்கள் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பிரைவேட் தங்கும் விடுதியைப் பல சுற்றுலாவாசிகள் பணம் செலுத்தி புக் செய்துள்ளனர். முன்பதிவு செய்தவர்கள் அந்த இடத்துக்குச் சென்ற போது இரண்டு தரப்புக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

  பிபிசி செய்தி வெளியிட்ட அறிக்கையின்படி வடக்கு லண்டனில் வசிக்கும், பிரைவேட் ஹோம் என்று லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் வீட்டின் உரிமையாளர் திடீரென்று தன் வீட்டிற்குப் புதிதாக 12 நபர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்ததும் லேசாக அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் யார் என்று விசாரித்தபோது booking.com வலைத்தளம் மூலம் அவரது வீட்டை முன்பதிவு செய்திருப்பதாகச் சுற்றுலாவாசிகள் கூறினர்.

  Also Read :தூங்கி கொண்டிருந்த சிறுவனின் சட்டையில் புகுந்த பாம்பு... காப்பாற்ற போராடிய தாய்.. இறுதியில் நடந்தது - நெஞ்சை உலுக்கும் வீடியோ

  ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை ஹாங்காங், லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அந்தப் பெண்ணின் டூரிஸ்ட்டுகள் என்று வீட்டிற்குப் பலரும் வருகை தந்துள்ளனர். 4 ஜூலை அன்று ஒரு பெண்ணும் அவரது மகளும் ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பிரைவேட் ஹோம் என்று வீட்டை முன்பதிவு செய்துள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் தாங்கள் அந்த வீட்டை booking.com இல் பட்டியலிடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். வீட்டு உரிமையாளர், இதைப் பற்றி புகாரும் அளித்திருந்தார்.

  ஆறு நாட்களுக்குப் பிறகு, வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில் அந்த முன்பதிவு வலைத்தளத்திலிருந்து அவரது லிஸ்டிங் நீக்கப்பட்டது. ஆனால் அதே முகவரி வேறொரு லிஸ்டில் இணைக்கப்பட்டிருந்தது. புதிதாக முகவரி இணைக்கப்பட்ட வீட்டின் புகைப்படங்கள் வேறொரு வீட்டை அடையாளம் காட்டின.

  அதற்கு அடுத்த சில நாட்களில் முன்பதிவு செய்ததாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரது வீட்டுக்கு வந்ததாகப் புகார் அளித்திருந்தார்.

  Also Read :இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? காதலில் உங்கள் பெர்சனாலிட்டியை தெரிந்து கொள்ளலாம்

  “உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலிருந்து பயணிகள் வந்தார்கள்; ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சிலர் வந்தார்கள்; ஒரு சிலர் சவுதி அரேபியாவிலிருந்து வந்தார்கள்; ஒரு சிலர் வடக்கு இங்கிலாந்திலிருந்து வந்தார்கள்; தன்னால் நம்பவே முடியவில்லை. இது ஒரு மோசடி என்று வெளிப்படையாகத் தெரிகிறது. யாரோ என்னுடைய முகவரியைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பயணிகளை ஏமாற்றி இருக்கின்றனர். இதை அறியாமல் என் வீட்டுக் கதவைத் தட்டும் அந்த பயணிகளைப் பார்க்கும் பொழுது எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு உண்மையைச் சொல்லி அவரைத் திருப்பி அனுப்புவது மட்டும் தான் என்னால் செய்ய முடிந்தது” என்று தனது வருத்தத்தை அந்த வீட்டு உரிமையாளர் பிபிசி செய்திகளிடம் பகிர்ந்து கொண்டார்.

  ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் இதை ட்விட்டர் தளத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த பிரைவேட் ஹோமின் முகவரி நிரந்தரமாகத் தளத்திலிருந்து நீக்கப்பட்டு, பயணிகள் மற்றும் அந்த வீட்டு உரிமையாளரிடம் மன்னிப்பும் கோரியதாகவும், முன்பதிவு செய்த அனைவருக்கும் உரியத் தொகை திருப்பி வழங்கப்பட்டதாகவும் booking.com சார்பாகச் செய்தி வெளியானது.
  Published by:Janvi
  First published:

  Tags: Star Hotels, Websites

  அடுத்த செய்தி