முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / லடாக்கின் பிரபலமான ஏரிக்கரையில் காரை ஓட்டி கும்மாளம் அடித்த இளைஞர்கள் - வாட்டி எடுத்த நெட்டிசன்கள்!

லடாக்கின் பிரபலமான ஏரிக்கரையில் காரை ஓட்டி கும்மாளம் அடித்த இளைஞர்கள் - வாட்டி எடுத்த நெட்டிசன்கள்!

லடாக்கில் 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன மற்றும் பாங்காங் போன்ற ஏரிகள் பல பறவை இனங்களின் தாயகமாகவும் இருந்து வருகிறது.

லடாக்கில் 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன மற்றும் பாங்காங் போன்ற ஏரிகள் பல பறவை இனங்களின் தாயகமாகவும் இருந்து வருகிறது.

லடாக்கில் 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன மற்றும் பாங்காங் போன்ற ஏரிகள் பல பறவை இனங்களின் தாயகமாகவும் இருந்து வருகிறது.

பொதுவாக இயற்கை சார்ந்த விஷயங்களில் நாம் பெரிதும் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இயற்கை சூழலை நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அந்த அளவிற்கு அது சிறப்பாக இருக்கும். இதை சீரழிக்க தொடங்கி விட்டால், நாம் எதிர்பாராத பல விளைவுகள் வரக்கூடும். அந்த வகையில் இயற்கை நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல கூடிய பலரும் கொஞ்சம் கூட அதை சரியான முறையில் பராமரிப்பது கிடையாது. மாறாக அந்த இடங்களில் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை போட்டு விட்டு அசுத்தம் செய்து விடுவார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு விளைவிக்க கூடிய பல செயல்களை செய்பவர்களும் உண்டு. இது போன்ற ஒரு மோசமான நிகழ்வு தான் லடாக்கில் உள்ள பழமையான பாங்காங் ஏரி ஒன்றில் நடந்துள்ளது. இந்த ஏரிக்கரை வழியாக எஸ்யூவி வகை காரையை ஓட்டிச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் பதவிகளின் மூலம் காட்டி வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த வீடியோ ஏற்கனவே இணையத்தில் வைரலானது தான் என்றாலும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. ஜிக்மத் லடாக்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை தற்போது பதிவிட்டதன் மூலம் இது வைரலாகியது. “இன்னொரு வெட்கக்கேடான வீடியோவை மீண்டும் பகிர்கிறேன். இத்தகைய பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகள் லடாக்கைக் சீரழிக்கிறார்கள். லடாக்கில் 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன மற்றும் பாங்காங் போன்ற ஏரிகள் பல பறவை இனங்களின் தாயகமாகவும் இருந்து வருகிறது. இத்தகைய செயல் பல பறவை இனங்களின் வாழ்விடத்தை ஆபத்தில் ஆழ்த்தி விடும்" என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Also Read : ஆபீஸ்-க்கு வர சொன்னால் வேலையே வேண்டாம் - Apple நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கும் ஊழியர்கள்!

இந்த வீடியோ ட்விட்டரில் 7,00,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. இதை பார்த்த எல்லோரும் தங்களது கோபத்தையும், அதிர்ச்சியையும் ரீட்வீட் செய்து வருகின்றனர். “லடாக்கில் சில சுற்றுலாப் பயணிகள் செய்த போக்கிரித்தனங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. லடாக் நிர்வாகம், காவல்துறை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக லடாக்கின் பொது மக்கள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் கவனமாக இருந்து வருகின்றனர். மேலும் பழமை வாய்ந்த பாங்காங் ஏரியைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், இவர்களை போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்" என்று ஒருவர் கோபத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் பலர், "இந்த முட்டாள்களுக்கு இயற்கை மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை", "அருவருப்பான சுற்றுலா பயணிகள்", "இவர்கள் இயற்கை அழகை கெடுக்கிறார்கள்", "இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து கொஞ்சம் மூளை வாங்கினால் நன்றாக இருக்கும்" போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் கோபத்துடன் ட்வீட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Ladakh