Twitter Trending Today : தல vs தளபதி.. ட்ரெண்டாகும் #PSBB.. வூஹானில் நடப்பது என்ன? - இணையத்தில் இன்றைய ட்ரெண்டிங் இவை தான்

தல vs தளபதி.. ட்ரெண்டாகும் #PSBB

ட்விட்டரில் இன்றைய தினம் #PSBB , #Wuhan , #Ajith , #PriyankaChopra போன்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 • Share this:
  திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித். இவரது நடிப்பில் தற்போது ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. கோவையில் வெற்றி பெற்றால் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அதனை அறிவிக்கிறேன் என கூறியதற்காக ஒரு புறம் அவரது ட்விட்டர் பக்கத்தை பார்த்தபடியும் ரசிகர்கள் காத்திருக்க இதுவரை எவ்வித அப்டேட்டும் வரவில்லை.

  மாஸ்டரின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில், விஜய் நடித்து வருகிறார். தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் தெலுங்கில் சக்கை போடு போட்டது. இப்படி விஜய், அஜித் இருவரும் தங்கள் படங்களில் பிசியாக இருக்க இவரது ரசிகர்கள் வழக்கம் போல இணையத்தில் இன்று சண்டையை ஆரம்பித்துள்ளனர்.   

      

      

   

  தலயா? தளபதியா முற்று பெறாத போட்டி ஒன்று இணயத்தில் அரங்கேறி வருகின்றது.

   

      

      

      

  காலம் காலமாக அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இணையத்தில் சண்டையிட்டு வரும் தலைப்பு தான் இது தல vs தளபதி. இதுக்கு ஒரு எண்டே இல்லையா? என்பன போல அடிக்கடி இணையத்தில் தலைதூக்குகின்றது. அவ்விதம் இன்று ட்விட்டரில் அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. அதில் தல vs தளபதி யாரு கெத்து? என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

  இதற்கு அடுத்த படியாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் வூஹான். இன்று உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூகான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய 3 ஆய்வாளர்கள் தங்களுக்கு தொற்று இருப்பதாகவும் மருத்துவமனை சிகிச்சை தேவை என்றும் கூறியதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.அதாவது இதுவரை வெளிவராத அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதைத் தெரிவித்துள்ளது.

   

      

        இந்த புதிய அறிக்கையின் படி வூகான் வைரஸ் ஆய்வு சோதனைக்கூடத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆய்வளர்களின் எண்ணிக்கை, அவர்களது மருத்துமனை வருகைப் பதிவுகள், அவர்கள் நோய்வாய்ப்பட்ட காலம் ஆகியவை இந்த வூகான் சோதனை நிலையத்திலிருந்துதான் வைரஸ் கசிந்துள்ளது என்ற ஐயத்தின் மீதான உறுதிப்பாட்டை வலுவடையச் செய்துள்ளது.

  கோவிட்-19 குறித்த அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகளை உலகச் சுகாதார அமைப்பு நடத்தவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.இதன் காரணமாக இணையத்தில் வூஹான் எனும் ஹேஷ்டேகில் சீன கொடியும், உலக சுகாதாரத் அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றது.

   

  இதற்கு அடுத்த படியாக இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #PSBB.  சென்னை கே.கே.நகர் அழகிரி சாமி சாலையில் முகவரியில் அமைந்துள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 12- ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் அதே வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கே.கே நகர் காவல் துறையினர் ஆசிரியர ராஜகோபாலன் விவரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆசிரியரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இணைய தள பக்கங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

   

         

  அடுத்ததாக பிரியங்கா சோப்ரா எனும் ஹேஸ்டேக் வைரலாகி வருகின்றது. அதில் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

      

      

  இவ்விதம் இன்றைய தினம் ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக்குகள் குறித்து பல பதிவுகள் ட்விட்டரில் பதிவிடபட்டு வருகின்றன
  Published by:Sankaravadivoo G
  First published: