ரூபிக்ஸ் க்யூப்பை சரியான முறையில் கட்டமைப்பது, நம்மில் பலருக்கும் மிகவும் கடினமான ஒரு செயலாகும். இன்னும் சொல்லப்போனால் "கலர் கலரா.. கட்டம் கட்டமா இருக்குமே. அது பேரு என்ன? என்று கேட்பவர்களே இங்கு அதிகம். அந்த அளவிற்கு ரூபிக்ஸ் க்யூப்பிற்கும் நம்மில் பலருக்கும் "வாய்க்கால் தகராறு" உள்ளது!
இருப்பினும், இதெல்லாம் ஒரு மேட்டரா? ரூபிக்ஸ் க்யூப்லாம் எனக்கு ஜுஜுப்பி போல! என்று அதை படக்படக்கென்று முறுக்கி 'சால்வ்' செய்பவர்களும் இங்குண்டு!
இன்னும் ஒரு படி மேலே சென்று, அதே ரூபிக்ஸ் க்யூப்பை வைத்து பல வகையான உலக சாதனைகளை செய்பவர்களும் உண்டு. அப்படியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இளைஞர், தன் கண்களை மூடிக்கொண்டே ரூபிக்ஸ் க்யூப்பை சரியான முறையில் கட்டமைப்பத்தில் ஒரு புதிய எல்லையை தொட்டுள்ளார்.
இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், அவர் முன்பு உருவாக்கிய சாதனையை அவரே முறியடித்து உலக சாதனை பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
Also Read : ஊழியருக்கு ‘பாஸ்’ அனுப்பிய மின்னஞ்சல் இணையத்தில் வைரல்.. அப்படி என்னதான் அனுப்பி இருந்தார்..?
அவர் செய்த உலக சாதனையை, கின்னஸ் வொர்ல்ட் ரெக்கார்ட்ஸ் தன் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளது. அந்த போஸ்ட்டிற்கான கேப்ஷன் ஆக "
புதிய பிளைன்ட்-போல்டட் ஸ்பீட் க்யூபிங் சாம்பியன், டாமி செர்ரியின் 14.67 வினாடிகள்" என்று எழுதப்பட்டது.
மேலும் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் தன் போஸ்டிற்கு பதிலளிக்கும் போது, குறிப்பிட்ட சாதனையை பற்றிய மேலும் சில தகவல்களை அளித்தது.
"இந்த சாதனைகளை முறியடிக்கும் திறனைப் பெற எவருக்கும் நிறைய நேரம் எடுக்கும்" என்று டாமி அறிவுறுத்துகிறார். 'எனவே, உங்கள் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாக உணர்ந்தால், சோர்வடையாமல் இருக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்' என்று கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கூறி உள்ளது
Also Read : Viral Video | உலகின் உயரமான சைக்கிள் தயாரித்து ஓட்டிச் செல்லும் நபர்
மற்றொரு கமெண்ட்டில் “ஒரு சாதனையை முயற்சிக்க விரும்பும் எவருக்கும், @tommycherry11111 வழியாக கிடைக்கும் சில ஆலோசனைகள் உள்ளது - 'நீங்கள் செய்ய விரும்பும் சாதனையின் மீது ஆர்வமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் செய்வதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், அதில் உங்களால் மிகவும் திறம்பட பயிற்சி செய்ய முடியும்!'." என்றும் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கூறி உள்ளது.
நினைவூட்டும் வண்ணம், கடந்த டிசம்பர் 2021 இல் வேர்ல்ட் க்யூபிங் அசோசியேஷன் (WCA) ப்ளோரிடா ஃபால் 2021 போட்டியில் செர்ரி சாதனை படைத்தார் என்றும் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் வலைப்பதிவு தெரிவிக்கிறது. செர்ரி சுமார் ஆறு ஆண்டுகளாக க்யூபிங் செய்து வருகிறார், மேலும் அவரது முந்தைய சாதனை 15.24 வினாடிகள் ஆகும்.
Also Read : விதவிதமான வண்ணங்களில் சமோசாக்களை தயாரிக்கும் கான்பூர் உணவகம்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
குறிப்பிட்ட வீடியோ 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அது பகிரப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 1.1 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது, இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போஸ்டில் எக்கச்சக்கமான கமெண்ட்டுகளும் பதிவான வண்ணம் உள்ளது.
"இது மனதைக் கவர்கிறது" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கமெண்ட் செய்துள்ளார். "கண்களைத் திறந்தபடி 24 மணி நேரத்தில் கூட இதை செய்ய முடியாது" என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.