தங்கப் பதக்கத்தை ஆடைக்குள் மறைத்துவைத்து பாதுகாப்பு வீரர்களை ப்ராங்க் செய்த ஒலிம்பீக் வீராங்கனை -வீடியோ

ஒலிம்பிக் வீராங்கனை

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை செய்த பிராங்க் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 • Share this:
  கனடாவைச் சேர்ந்தவர் கெல்சே மிட்செல். டோக்கியோவில் நடைபெற்ற முடிந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். உக்ரேனைச் சேர்ந்த ஒலினா ஸ்டாரிகோவா மற்றும் ஹாங்காங்கைச் சேரந்த வாய் சே லியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அவர், ஜப்பான் விமான நிலையத்தில் செய்த கலாட்டாவை வீடியோவை எடுத்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Kelsey Mitchell (@kelsey.mitchell9)

  அந்த வீடியோ இணையத்தில் பலரையும் ரசிக்கவைத்துள்ளார். விமான நிலையத்தில் பயணிகளைச் சோதனை செய்யும் மெட்டல் டிடக்டருக்குள் அவர் வரும்போது பீப் என்ற ஒலி எழுந்தது. அதனையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் அவரை சோதனை செய்யவந்த போது அவரது ஆடைக்குள் வைத்திருந்த தங்கப் பதக்கத்தை எடுத்துக் காண்பித்து சிரித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது செய்கையைப் பார்த்து பாதுகாப்பு வீரர்களும் சிரித்தனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், ‘ஜப்பான் மக்கள் மிகவும் சிறப்பானவர்கள். மிகவும் அன்பானவர்கள், உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், நட்புடன் பழகக் கூடியவர்கள். மேலும், என்னுடைய ஜோக்கிற்கு சிரிக்கக் கூடியவர்கள். ஒலிம்பிக் போட்டியை நடத்தியதற்கு ஜப்பானுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: