• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஹாஸ்பிடல் பெட்டில் நின்று சிறு குழந்தை செய்த செயல் - நெட்டிசன்களை உற்சாகப்படுத்தும் வைரல் வீடியோ!

ஹாஸ்பிடல் பெட்டில் நின்று சிறு குழந்தை செய்த செயல் - நெட்டிசன்களை உற்சாகப்படுத்தும் வைரல் வீடியோ!

ஹாஸ்பிடல் பெட்டில் நின்று நடனமாடும் குழந்தை

ஹாஸ்பிடல் பெட்டில் நின்று நடனமாடும் குழந்தை

பாசிட்டிவ் எனர்ஜி தரும் இந்த அழகான வீடியோவை ஷேர் செய்துள்ள ட்விட்டர் யூஸர் GoodNewsCorrespondent என்பவர், ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில் கூட இந்த சிறுவன் பாடுகிறான் & நடனமாடுகிறான்! டிவி-யில் அவனுக்கு பிடித்த பாடல் வரும் போது அவனது உடல் மற்றும் மனநிலை அவன் பாடுவதையும் டான்ஸ் ஆடுவதையும் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
யாரும் எந்தவொரு காரணத்திற்காகவும் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி தங்குவதை விரும்புவதில்லை. தவிர நோய்க்கான தீவிர சிகிச்சைக்காகவோ, எதிர்பாராத விதமாகவோ ஒருவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படுவது இன்னும் மோசமான ஒரு விஷயம் ஆகும். குணமடைவதற்காக தான் ஒருவர் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகிறார் என்றாலும் கூட அங்கிருக்கும் சூழல் மற்றும் பலதரப்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவருக்கு உலகிலேயே மிகவும் மனசோர்வு மற்றும் மனஅழுத்தத்தை தர கூடிய இடமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை டாக்டர் அல்லது ஹாஸ்பிடல் என்றாலே ஒரு வித பயம் மனதில் தொற்றி கொள்கிறது. எனினும் ஹாஸ்பிட்டலில் அரிதாக நிகழும் உற்சாகமான நேர்மறை நிகழ்வுகள் அங்கு துன்பத்தில் இருப்போரை மட்டுமல்ல பல மக்களின் கவலைகளை போக்க கூடிய மருந்தாக அமையும். அப்படிப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறிய குழந்தை ஒன்று, தனக்கு பிடித்த பாடல் டிவி-யில் ஓடுவதை கண்டவுடன் ஆர்வ மிகுதியில் ஹாஸ்பிடல் பெட்டில் இருந்து எழுந்து நின்றபடி மிகவும் உற்சாகமாக மனமார பாடுவதை காட்டும் ஒரு அற்புத வீடியோ அது.
Miguel என்ற பெயரை கொண்ட பிரேசில் நாட்டை சேர்ந்த அந்த குழந்தை இரைப்பை குடல் அழற்சிக்காக ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக இந்த வயது குழந்தைகள் ஹாஸ்பிடல் என்றாலே பயந்து நடுங்கும் நேரத்தில், துவக்கம் முதலே Miguel பயமோ அல்லது கவலைக்கான லேசான அறிகுறிகளையோ காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

Also read... மூன்று ஆண்டுகளாக பச்சை மாமிசத்தை மட்டுமே உண்ணும் அமெரிக்கா நபர்!

இந்நிலையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் குறிப்பிட்ட 48 வினாடிகள் ஓடும் வீடியோவில், குழந்தை Miguel தான் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் ரூமில் வைக்கப்பட்டுள்ள டிவி-யில் ஒருவர் மைக்கை பிடித்து கொண்டு பாடுவதை கண்டவுடன், கையில் வைத்திருக்கும் ஸ்பூனை மைக்காக நினைத்து கூட சேர்ந்து உரக்க, உற்சாகமாக மற்றும் இனிமையாக மழலை குரலில் பாடுகிறது. இதனை அங்கிருப்போர் வியந்து பார்த்து வீடியோ எடுக்கின்றனர்.பாசிட்டிவ் எனர்ஜி தரும் இந்த அழகான வீடியோவை ஷேர் செய்துள்ள ட்விட்டர் யூஸர் GoodNewsCorrespondent என்பவர், ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில் கூட இந்த சிறுவன் பாடுகிறான் & நடனமாடுகிறான்! டிவி-யில் அவனுக்கு பிடித்த பாடல் வரும் போது அவனது உடல் மற்றும் மனநிலை அவன் பாடுவதையும் டான்ஸ் ஆடுவதையும் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள் Miguel-ன் மன தைரியம் மற்றும் அவனது பாட்டு மற்றும் டான்ஸை வெகுவாக பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: